தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகம்

கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகம்

கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகம்


ADDED : ஆக 21, 2017 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2017 11:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அ.தி.மு.க., அலுவலகம் வருவது குறைந்து விட்டது. ஜெ., இருந்தபோது, அவர் கட்சி அலுவலகம் வருகிறார் என்றால், அந்தப் பகுதியே திருவிழா போல் காட்சி அளிக்கும். அவர் வரும் வழியெங்கும் பேனர், தோரணம் என, அமர்க்களப்படும். வழியெங்கும் தாரை, தப்பட்டை முழங்க, மேளதாளங்கள் ஒலிக்க, கட்சியினர் வரவேற்பு அளிப்பர். அவர் மறைவுக்கு பின், சசிகலா பொதுச்செயலரானதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரும்பவில்லை. எனவே, அவர்கள் கட்சி அலுவலகம் வருவதை தவிர்த்தனர். சசிகலா, கட்சி அலுவலகம் வரும்போது, ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். தொண்டர்களிடம் காணப்படும் உற்சாகத்தை, அவர்களிடம் காண முடியவில்லை.

சசிகலா சிறைக்கு சென்றதும், தினகரன், கட்சி அலுவலகம் வந்து சென்றார். ஆட்கள் அழைத்து வருவதும் குறைக்கப்பட்டது. இதனால், கட்சி அலுவலகம் வெறிச்சோடியே காணப்பட்டது. நேற்று, அ.தி.மு.க., அணிகள் இணைப்பு நிகழ்ச்சி, கட்சி அலுவலகத்தில் நடைபெறும் தகவல் அறிந்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கட்சி அலுவலகம் வந்தனர்.

இரு அணிகள் இணைவதை ஒட்டி, பூசணிக்காய் உடைத்து, திருஷ்டி கழித்தனர். பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக வந்த தகவலால், சில தொண்டர்கள் ஆத்திரமடைந்து, தினகரனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். 'சசிகலா குடும்பத்தை, கட்சியில் இருந்து, முழுமையாக நீக்க வேண்டும்' என வலியுறுத்தினர். கட்சியினர் கூட்டம் அதிகம் இருந்ததால், அ.தி.மு.க., அலுவலக பகுதியில், சுண்டல், பட்டாணி, வேர்க்கடலை விற்பனை, அமோகமாக நடந்தது. அலுவலகம் உள்ளே உள்ள கடையில், டீ, குடிநீர், குளிர்பானங்கள் அனைத்தும் விற்று தீர்ந்தன. கட்சி அலுவலகம் எதிரே, அ.தி.மு.க., கொடி, ஜெ., படம் விற்பனை அமோகமாக இருந்தது.

மதியத்திற்கு மேல், பன்னீர்செல்வம் கட்சி அலுவலகம் வந்தபோது, நிர்வாகிகளிடம் உற்சாகம் கரைபுரண்டோடியது. அனைவரும், அவரை வாழ்த்தி, உற்சாக குரல் எழுப்பினர்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us