தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சூரிய மின்சக்திக்கு மாறும் ஜப்பான் : டோக்கியோ பேராசிரியர் தகவல்

சூரிய மின்சக்திக்கு மாறும் ஜப்பான் : டோக்கியோ பேராசிரியர் தகவல்

சூரிய மின்சக்திக்கு மாறும் ஜப்பான் : டோக்கியோ பேராசிரியர் தகவல்


ADDED : ஆக 28, 2017 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2017 11:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: ''ஜப்பானில் சூரியமின்சக்தி போன்ற மரபுசாரா எரிசக்திக்கு மாறி வருகிறோம்,'' என டோக்கியோ தொழில்நுட்ப மைய பேராசிரியர் மாசாஹிரா மியாச்சி பேசினார். மரபுசாரா எரிசக்தி ஆற்றலில் புதியவற்றை மேம்படுத்துவது குறித்த சர்வதேச கருத்தரங்கு, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நடந்தது. புத்தாக்க ஆற்றல் அறிவியல் துறை தலைவர் ராஜசேகரன் வரவேற்றார். துணைவேந்தர் பாஸ்கர் பேசியதாவது: மனிதனால் ஏற்படும்

பேரிடரால் சுற்றுச்சூழல் மேலும் பாதிக்கிறது. சர்வதேச அளவில் புவி வெப்பமாகும் பிரச்னை உருவெடுத்துள்ளது. ஒரு சில நாடுகளில் குடிக்க தண்ணீர் இல்லை; இன்னொரு புறம் வெள்ளப் பெருக்கால் உயிர்ப்பலி ஏற்படுகிறது.இயற்கை, சுற்றுச்சூழலை பாதிக்காத எரிசக்தி ஆற்றலை பயன்படுத்த வேண்டும். காற்றாலை, சூரிய மின்சக்தி, 'பியூல் செல்' ஆகியவற்றை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எல்.இ.டி., விளக்குகளால் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. நிலக்கரி, எண்ணெய் வளங்களை மட்டுமே எரிபொருளுக்கு நம்பியிருக்கிறோம்; அந்த வளங்கள் குறைந்து வருகின்றன. அவற்றில் இருந்து வெளியாகும் நச்சுவாயுக்களால் சுற்றுச்சூழலும் பாதிக்கிறது. இவ்வாறு பேசினார்.

ஜப்பான் டோக்கியோ தொழில்நுட்ப மைய பேராசிரியர் மாசாஹிரா மியாச்சி பேசியதாவது:

ஜப்பானில் எரிசக்திக்கு இயற்கை வளங்களே இல்லை. அணுசக்தியை நம்பி இருந்தோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்

ஏற்பட்ட நில அதிர்வால் அணுசக்தியாலும் பாதிப்பு ஏற்பட்டது.

கதிரியக்கம் மூலம் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால், புதிய ஆற்றலை தேடிச் செல்கிறோம். சூரிய மின்சக்தி போன்ற மரபுசாரா எரிசக்திக்கு மாறிவருகிறோம்.

இவ்வாறு பேசினார்.

பல்வேறு நாடுகளை சேர்ந்த அறிஞர்கள்

மரபுசாரா எரிசக்தி குறித்து பேசினர்.

துறைத்தலைவர்

ராஜசேகரன் கூறியதாவது: பல்கலை வளாகத்தில் 5 கோடி ரூபாயில், ௧ மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் சூரியமின்சக்தி தகடுகள் அமைக்க உள்ளோம். இதற்காக ஐந்து ஏக்கரில் பணிகள் நடக்கின்றன. தினமும் ஐந்தாயிரம்

யூனிட்

மின்சாரம் உற்பத்தி

செய்யப்படும். ஒரு மாதத்தில், பல்கலையின் தேவையான ௮௦ ஆயிரம் யூனிட் போக மீதமுள்ள 70 ஆயிரம் யூனிட்டை, மத்திய தொகுப்பிற்கு வழங்குவோம். இதன் மூலம் 5 கோடி ரூபாய் செலவை ஏழு ஆண்டுகளில் ஈட்டுவோம்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us