இன்று அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி
இன்று அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி
ADDED : ஆக 31, 2017 04:58 AM

சென்னை: அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சென்னை வர முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட வாரியாக அவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார்.
முதல்வருக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். முதல்வர் பதவி விலக வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர். கவர்னரிடம் மனு அளித்த அவர்கள் புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் இன்று (ஆக.,31) சென்னை வர முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இன்று காலை 10 மணி முதல், மாவட்ட வாரியாக, எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். தலைமை செயலகத்தில் நடக்கும் இந்த சந்திப்பின் போது, அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். முதல்வர் அலுவலகத்திலிருந்து எம்எல்ஏக்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
