உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 03, 2017 02:38 PM

அ நிறம் | அளவு
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை ஜனநாயக முறையில் வீழ்த்துவோம்.
சமூக நீதியையும், மாநில உரிமையையும் பறிகொடுத்துவிடுவோமோ என்ற வேதனை தீ நெஞ்சில் எரிகிறது. கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக உறுதியுடன் பாடுபடும். மத்திய அரசு சர்வாதிகார போக்குடன் ஆட்சி நடத்துகிறது. அனிதாவின் உயிரை காப்பாற்ற முடியாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டு விட்டது. அனிதா தற்கொலையை கொச்சைப்படுத்தி பா.ஜ., பேசுவது கொடுங்கோல் ஆட்சியை உணர்த்துகிறது. மத்திய அரசும், அதிமுக அரசும் மாணவர்களை ஏமாற்ற நாடகம் நடத்தினர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
