தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/'பா.ஜ., காரணமில்லை' : பம்முகிறார் தினகரன்

'பா.ஜ., காரணமில்லை' : பம்முகிறார் தினகரன்

'பா.ஜ., காரணமில்லை' : பம்முகிறார் தினகரன்


ADDED : செப் 08, 2017 10:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2017 10:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: ''அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னைக்கு, பா.ஜ., போன்ற வேறு கட்சிகளை குறை கூற முடியாது,'' என, சசிகலாவின் அக்கா மகன் தினகரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில், நேற்று அவர் அளித்த பேட்டி: இரட்டை இலையை முடக்குவதற்கு காரணமான பன்னீர்செல்வம், ஊழல் ஆட்சி நடத்தும் முதல்வர் பழனிசாமி ஆகியோரை நீக்க வேண்டும் என்பது தான், எங்களின் கோரிக்கை. விசுவாசமுள்ள தலைமையின் கீழ் ஆட்சியை நடத்த வேண்டும். செப்., 12ல், அவர்கள் நடத்த உள்ளதாக கூறப்படும் பொதுக்குழு போலியானது. அதில் பங்கேற்போர் மீது நடவடிக்கை எடுப்போம்.

எங்கள் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனக்கூற முடியாது. இப்போது கூட, நான் போனில் பேசினேன். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை, பழனிசாமி தரப்பினர் ஆக்கிரமித்துள்ளனர்; அவர்களை அப்புறப்படுத்துவோம்.

'நீட்' பிரச்னையில் இறந்த அனிதாவின் வீட்டுக்கு, ஆட்சியாளர்கள் யாரும் செல்லவில்லை. இதில் இருந்தே, மக்கள் அவர்களுக்கு எதிராக உள்ளது புரியும். அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னைக்கு, பா.ஜ., போன்ற வேறு கட்சிகளை குறை கூற முடியாது.

ஜக்கையன் அணி மாறியதற்கு காரணம் தெரியவில்லை. அமைச்சர் சீனிவாசன் கூறியது போல, பாதாளம் வரை பாயும் ஏவுகணையை, அவர் மீது பாய்ச்சி இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us