தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா : ஊட்டியில் நீடிக்கும் சிக்கல்

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா : ஊட்டியில் நீடிக்கும் சிக்கல்

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா : ஊட்டியில் நீடிக்கும் சிக்கல்


ADDED : செப் 16, 2017 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2017 12:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டியில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடத்த, ஊட்டி குதிரைப்பந்தய மைதானத்தில் பந்தல்கால் நடப்பட்ட நிலையில், ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மைதானத்திலும் நேற்று, பூமி பூஜை போடப்பட்டது.

மாநில அரசின் சார்பில், நீலகிரி மாவட்டம், ஊட்டியில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடத்த, ஊட்டி குதிரைப்பந்தய மைதானம் தேர்வு செய்யப்பட்டது.

கலெக்டர், அமைச்சர்கள் முன்னிலையில், சில நாட்களுக்கு முன், மைதானத்தில் பந்தல்கால் நடப்பட்டது.

சதுப்பு நிலமான அந்த மைதானத்தில், விழா திடல் அமைக்க, 'பொக்லைன்' உதவியுடன் புற்கள், மண் திட்டுகள் வெட்டி அகற்றப்பட்டு, நிலத்தை சமப்படுத்தும் பணி துவங்கியது.

ஊட்டியில், தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில், மைதானம் முழுக்க மழைநீர், குளம் போல் தேங்கியது. இதனால், திடல் அமைக்கும் பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் விழா நடத்த திட்டமிடப்பட்டு, அங்கு, நேற்று மதியம் பூமி பூஜை நடத்தப்பட்டது.

கடந்த, 11ம் தேதி, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடப்பதாக இருந்தது.

ஆனால், 12ம் தேதி, முதல்வர் மற்றும் துணை முதல்வர் தரப்பில், பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இருப்பினும், 'விழா நடத்தும் இடம் தேர்வில் சிக்கல் நீடிப்பதால், அடுத்த மாதம், முதல் வாரத்துக்கு, விழா தள்ளி போகலாம்' என, கட்சியினர் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us