தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி கைதாவாரா?

நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி கைதாவாரா?

நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி கைதாவாரா?


UPDATED : செப் 22, 2017 10:36 AM

ADDED : செப் 21, 2017 10:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2017 10:36 AM ADDED : செப் 21, 2017 10:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர் மற்றும் திருச்சியில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான சிலரின் வீடுகள் மற்றும் ஒன்பது நிதி நிறுவனங்கள் உட்பட, 24 இடங்களில், வருமான வரித்துறையினர், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான ஆவணங்களும், தங்கக் காசுகளும் சிக்கி உள்ளன. இது தவிர, மோசடி வழக்கிலும்,

செந்தில் பாலாஜி சிக்கியுள்ளதால், அவர் கைது செய்யப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

@Image@நாடு முழுவதும், கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, வருமான வரித்துறை, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப்பட்ட தொகையில், 5,500 கோடி ரூபாய் அளவிற்கு, கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டு உள்ளது. அதில், தமிழகத்தில் மட்டும், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, கண்டறிய பட்டு உள்ளது. அதையடுத்து, தமிழகத்தில், கல்வி நிறுவனம், கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து, வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் வரிசையில், 'மாஜி' அமைச்சர் செந்தில் பாலாஜியும், இப்போது வருமான வரி வலையில் சிக்கியுள்ளார்.அவரது சொந்த ஊரான கரூரில், வருமான வரித்துறையினர், நேற்று காலை, 10:00 மணிக்கு, திடீர் சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான சிலரின் வீடுகள் மற்றும் நிதி நிறுவனங்களில் சோதனை நடந்தது.

கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து, 25க்கும் மேற்பட்ட, வருமான வரி அதிகாரிகள், இந்த சோதனையில் ஈடுபட்டனர்.கடந்த தேர்தலின் போது, கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளை குறிவைத்து, வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர்

@nextcolumn@வரிசையில், 'மாஜி' மந்திரி செந்தில் பாலாஜியும், இப்போது வருமான வரி வலையில் சிக்கியுள்ளார்.

அவரது சொந்த ஊரான கரூரில், வருமான வரித்துறையினர், நேற்று காலை, 10 மணிக்கு, திடீர் சோதனை நடத்தினர்.

செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான சிலரின் வீடுகள் மற்றும் நிதி நிறுவனங்களில் சோதனை நடந்தது. கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து, 25க்கும் மேற்பட்ட, வருமான வரி அதிகாரிகள்,இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த தேர்தலின்போது, செந்தில் பாலாஜியின் தேர்தல் வரவு செலவுகளை கவனித்ததாக கூறப்படும், கரூர், 'ஆர்த்தி ஏ டிரேடு' நிறுவன உரிமையாளர்கள் சாமிநாதன், ஜெ., பேரவை நிர்வாகி மனோகரன், 'ஆசி டெக்ஸ்' உரிமையாளர்கள் தியாகராஜன், செல்வராஜ், அ.தி.மு.க. முன்னாள் நகர அவைத் தலைவர் சரவணன், சாயப் பட்டறை உரிமையாளர் சுப்பிரமணியன், கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணியன், ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் உட்பட, மாஜியின் உறவினர், நண்பர்கள் வீடுகள், நிதி நிறுவனங்கள், அலுவலகங்களில் சோதனை நடக்கிறது.

கரூர், திருச்சியில்...


இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

கரூரில், ஆக., 11, 12 தேதிகளில், ஒன்பது நிதி நிறுவனங்களில் சோதனை நடத்தினோம். அதில், கணக்கில் வராத, ஐந்து கோடி ரூபாய் பணம் மற்றும், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டது. அங்கு, மேலும் சில நிதி நிறுவனங்கள், வரி ஏய்ப்பு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக, கண்காணிப்பு வளையத்தில் இருந்தன. அந்த இடங்களில், நேற்று சோதனை துவங்கியது.

இந்த சோதனை, ஒன்பது நிதி நிறுவன குழுமங்களை குறிவைத்து நடத்தப்பட்டது. இது தொடர்பாக, கரூரில், 22 இடங்களிலும், திருச்சியில், இரண்டு இடங்களிலும் சோதனை நடந்துள்ளது. சோதனையில், பல கோடி ரூபாய் சேமிப்பு உள்ளிட்ட ஆவணங்கள், தங்க காசுகளை பறிமுதல் செய்துள்ளோம்; ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனை இன்னும் தொடர்கிறது; முடிந்ததும், அவற்றை மதிப்பிடும் பணி நடக்கும். செந்தில் பாலாஜிக்கு, 'சம்மன்' அனுப்பப்படுமா என்ற

@nextcolumn@ கேள்விகளுக்கு, இப்போது பதில் சொல்ல முடியாது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விரைவில் கைது?:


இதற்கிடையே, செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக கூறி, 95 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, அவரை கைது செய்ய, தமிழக போலீசார் காத்திருக்கின்றனர். இந்த வழக்கில்,அவர் முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதில், அவருக்கு முன்ஜாமின் கிடைக்கவில்லை என்றால், உடனடியாக கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்ஜாமின் கோரி மனு


மோசடி வழக்கில், முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'மாஜி' அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,வாக இருந்து, பதவி இழந்தவர், செந்தில் பாலாஜி; ௨௦௧௧ - ௧௫ம் ஆண்டில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். உயர் நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு:மத்திய குற்றப்பிரிவு போலீசில், கணேஷ்குமார் என்பவர் அளித்த புகார் பதிவு செய்யப்படாத தால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால், வழக்குப் பதிவு செய்யும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மோசடி, மிரட்டல் பிரிவுகளின் கீழ், நான் உள்ளிட்ட நால்வர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

போக்குவரத்து துறையில் ஊழியர்கள் நியமனங்களுக்கு, பணம் வசூலிக்கும்படி நான் கூறியதாகவும், அதன்படி, ௯௫ லட்சம் ரூபாய் வசூலித்து, பிரபு மற்றும் சகாயராஜ் என்பவர்களிடம் கொடுத்ததாகவும், கணேஷ்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். பணம் வசூலித்து, ௨௩ மாதங்களுக்கு பின், இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில், நான் அவர்களை சந்தித்ததாக கூறப்படும் தேதி, மாதம், ஆண்டு எதுவும் இல்லை. வேண்டும் என்றே, என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளனர்.

அரசுக்கு எதிரானவராக, என்னை இந்த அரசு கருதுகிறது. 18 எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர் தகுதியிழப்பு செய்தார். அதில், நானும் ஒருவன். எனக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைக்கு, இது ஒன்றே போதும். எனக்கு எதிரான புகார், பொய்யானது. சகாயராஜ், யார் என தெரியாது. பிரபு என்பவர், கரூரை சேர்ந்த, அ.தி.மு.க., தொண்டர்; அவர், என் உறவினர் இல்லை.

வேலை வாய்ப்பகம் வழியாக தான், போக்குவரத்து துறையில் நியமனங்கள் நடக்கின்றன. கர்நாடக மாநிலம், கூர்க் அருகில், நான் இருந்தபோது, எம்.எல்.ஏ.,க்கள் பயணித்த வேனை, தமிழக போலீசார் வழிமறித்து, நான் இருக்கிறேனா என பார்த்தனர். என்னை கைது செய்ய, தமிழக போலீசார், கடுமையான முயற்சிகளை எடுக்கின்றனர். எனவே, எனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.- நமது சிறப்பு நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us