உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 23, 2017 10:37 PM
அ நிறம் | அளவு
சென்னை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்களின் விபரம், அரசு இணையதளத்தில் நீக்கப்பட்டு, அவர்கள் தொகுதி காலியாக உள்ளது என, அறிவிக்கப்பட்டுள்ளது.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம், சட்டசபை செயலக இணையதளம் ஆகியவற்றில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் விபரம், நேற்று அகற்றப்பட்டது.
அந்த தொகுதிகளும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, ஜெ., வெற்றிபெற்ற, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது.
