உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 30, 2017 10:52 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு, சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு மத்திய சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் நடராஜன், 74; கல்லீரல், சிறுநீரக செயலிழப்பால், சென்னை மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவரை சந்திக்க, சசிகலா முடிவு செய்துள்ளார். இதனால், பரோல் பெற, என்னென்ன ஆவணங்கள் தேவை, பரோல் பெற தகுதி உள்ளதா, என்று சிறை கண்காணிப்பாளரிடம், சசிகலா கேட்டு தெரிந்து கொண்டதாக, சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பரோல் பெறுவதற்கான பணிகளிலும், அவர் ஈடுபட்டுள்ளார்.
