தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/எம்.ஜி.ஆர்., சிலையை மூடிய அ.தி.மு.க.

எம்.ஜி.ஆர்., சிலையை மூடிய அ.தி.மு.க.

எம்.ஜி.ஆர்., சிலையை மூடிய அ.தி.மு.க.


ADDED : அக் 01, 2017 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2017 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம், விருத்தாசலம் வழியாக சென்ற தினகரன்,

எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிப்பார்என கருதி, எம்.ஜி.ஆர்.,சிலையை, அ.தி.மு.க.,வினர் மூடினர்.போலீசில் அனுமதிசென்னையில் இருந்து, விருத்தாசலம் வழியாக, அரியலுாருக்கு நேற்று சென்ற தினகரனுக்கு, விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் வரவேற்பு அளிக்க,

தினகரன் அணியை சேர்ந்தவர்கள், போலீசில் அனுமதி பெற்று இருந்தனர்.வரவேற்பை தொடர்ந்து, ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு, தினகரன் மாலை அணிவிக்கப் போவதாக தகவல் பரவியது.இதையடுத்து,அமைச்சர் சம்பத் ஆதரவாளர்கள், நேற்று முன்தினம் இரவே, எம்.ஜி.ஆர்., சிலையை வெள்ளை துணியால் மூடி, பீடத்துடன் இருந்த இரும்பு படிகளைஅகற்றினர்.நேற்று காலை, 7:00 மணியளவில், சிலையின் பீடத்தை சுற்றிலும், கீற்றுகளால் தடுப்பு அமைக்கப்பட்டது.அமைச்சர் அணியை சேர்ந்தவர்கள், எம்.ஜி.ஆர்., சிலை பகுதியில் நேற்று காலை திரண்டதால், நுாற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

பாலக்கரை ரவுண்டானா

பகுதிக்கு, நேற்று மதியம் 12:00 மணியளவில், காரில் வந்த தினகரன், தொண்டர்களை சந்தித்து, புறப்பட்டார்.அப்போது, ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தத்தில், சசிகலா, தினகரன்ஆகியோரை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் கோஷமிட்டனர். இதனால்,பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us