தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஸ்டாலின் மீது அமைச்சர்கள் தாக்கு

ஸ்டாலின் மீது அமைச்சர்கள் தாக்கு

ஸ்டாலின் மீது அமைச்சர்கள் தாக்கு


ADDED : அக் 03, 2017 11:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2017 11:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினை தாக்கி அமைச்சர்கள் பேட்டி கொடுத்துள்ளனர்.

திமுக எம்எல்ஏக்கள் விரும்பவில்லை


அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: அறுதி பெரும்பான்மையுடன் தான் ஆட்சி செய்கிறோம். திமுக எம்எல்ஏக்களே சட்டசபை தேர்தலை விரும்பவில்லை. பழையவர்கள் மட்டும் தேர்தலை விரும்புகின்றனர். புதிதாக தேர்வான எம்எல்ஏக்கள் தேர்தலை விரும்பவில்லை. திமுக எம்எல்ஏக்கள் மத்தியில் ரகசிய ஓட்டெடுப்பு நடத்தினால், பெரும்பான்மையை ஸ்டாலின் இழக்க நேரிடும்.

சசிகலா பரோலில் வருவது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சொந்த காரணத்திற்காக வருகிறார் .

133 அடி திருவள்ளுவர் சிலை அமைக்க உத்தரவிட்டவர் எம்ஜிஆர்., திருவள்ளுவர் சிலையில் எம்ஜிஆர் பெயரில் கல்வெட்டு உள்ளதா? கருணாநிதி பெயர் இல்லை என்பதால் ஸ்டாலின் அழுகிறார். எங்கள் தலைவர் கல்வெட்டு இல்லாததற்கு நாங்கள் எப்படி கண்ணீர் வடிப்போம். தமிழக அரசை புலிகேசி ஆட்சி என சொல்லும் தினகரனே புலிகேசி. இவ்வாறு அவர் கூறினார்.

சகோதரர்கள் பிரச்னை:


அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டி: சகோதரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை விரைவில் சரி செய்யப்பட்டு அனைவரும் ஒன்றிணைவோம். அதிமுகவில் மோதலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தவறான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சொல்கிறார். திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டிய எம்ஜிஆர் பெயரை நீக்கியது ஏன்? சிவாஜி சிலை பீடத்தில் கருணாநிதி பெயரை நீக்கியதற்கு தற்போது கேள்வி கேட்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஆதங்கம்:


சென்னை திருவான்மியூரில் கைத்தறி கண்காட்சியை துவக்கி வைத்த பின் அமைச்சர் ஓ.எஸ். மணியன் அளித்த பேட்டி: முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் தலைமை பண்பற்று ஸ்டாலின் பேசுகிறார். நம்பிக்கை வாக்கெடுப்பு கேட்கும் ஸ்டாலின், மைனாரிட்டி ஆட்சி நடத்திய கருணாநிதியிடம் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us