அங்கீகாரமில்லா மனைகள் வரன்முறையில் முட்டுக்கட்டையாக உள்ள விதிகள் மாற்றம்?
அங்கீகாரமில்லா மனைகள் வரன்முறையில் முட்டுக்கட்டையாக உள்ள விதிகள் மாற்றம்?
UPDATED : அக் 05, 2017 01:28 AM
ADDED : அக் 04, 2017 11:37 PM

அங்கீகாரமில்லா மனைகள் வரன்முறை திட்டத்தில், முட்டுக்கட்டையாக உள்ள, சில விதிகளை மாற்றுவது குறித்து, உயரதிகாரிகள் ஆலோசிக்கின்றனர்.
@Image@தமிழகத்தில், 2016 அக்., 20க்கு முன், உருவாக்கப்பட்ட அங்கீகாரமில்லா மனைகள், மனைப்பிரிவுகளை, வரன்முறை செய்வதற் கான திட்டம், மே, 4ல் அறிவிக்கப்பட்டது. இதற்கு, நவ., 3க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில், 13 லட்சம் அங்கீகாரமில்லாத மனைகள், 27 ஆயிரம் மனைப்பிரிவுகள் உள்ளன.இதுவரை, 20 ஆயிரம் விண்ணப்பங்களே வந்து உள்ளன.
இந்த விண்ணப்பங்கள் அடிப்படையில், மனை களை வரன்முறை செய்வதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகி உள்ளன. நான்கு வகையான கட்டணங்கள், 'பிரேம் ஒர்க்'
@nextcolumn@ என்ற பெயரில், நில பயன்பாடு மாற்று நடைமுறையில் உள்ள குழப்பங்களால், இத்திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டது.
மனைகளை வரன்முறைப்படுத்த, மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்ஆகியோருக்கு, அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. 'லே - அவுட்' எனப்படும், மனைப்பிரிவு களை வரன்முறைப்படுத்த, சென்னையில், பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர்; மற்ற பகுதிகளில், உள்ளூர் திட்ட குழும உறுப்பினர் செயலர், மண்டல துணை இயக்குனர் அல்லது உதவி இயக்குனர் முடிவு எடுக்கலாம்.
சி.எம்.டி.ஏ.,வில், உறுப்பினர் செயலர் தான், வரன்முறை குறித்து முடிவு எடுப்பார் என்பதால், சென்னை பெருநகர் பகுதியில் உள்ள மனை பிரிவுகளுக்கு, மேல்முறையீடு செய்ய, அரசை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் முடிவெடுக்க, மாநகராட்சிநிலையிலேயே அதிகாரம் வழங்கி, மேல்முறையீட்டுக்கு, சி.எம்.டி.ஏ., உறுப்பினர்
செயலரை பொறுப்பாக்க வேண்டும் என, பல தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அதிகார குழப்பம் காரணமாக,@nextcolumn@ சென்னையில், எந்தவொரு மனைப்பிரிவை யும், வரன்முறைப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கும்.
இதில், டி.டி.சி.பி.,யில் உள்ள நடைமுறையை, சென்னை பெருநகர் பகுதிக்கும் கடைப்பிடிக்க லாமா என்பது குறித்து, துணை முதல்வரிடம், உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, விதிமுறைகளில் தேவையான திருத்தம் மேற்கொள்ள, ஒப்புதல் கிடைத்து உள்ளது. எந்தெந்த விதிகளை திருத்துவது என்பது குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
