உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : டிச 13, 2017 05:37 PM
அ நிறம் | அளவு
சென்னை: ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா நடப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானியிடம் திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.பின்னர் திமுகவின் ஆர்எஸ் பாரதி கூறுகையில், ஆர்கே நகரில் ஆளுங்கட்சியினரும், தினகரன் தரப்பினரும் போட்டி போட்டு கொண்டு பணப்பட்டுவாடா செய்கின்றனர்.
இதனை தடுக்காவிட்டால் தேர்தல் சுமூகமாக நடக்காது. பணப்பட்டுவாடாவை தடுக்காவிட்டால் நாளை கோர்ட்டிற்கு செல்வோம். ஆர்கே நகரில் போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.அதிமுகவின் முருகவேல் என்பவர், ஆர்கே நகரில் தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு குக்கர்களை கொடுப்பதாக லக்கானியிடம் புகார் கூறியுள்ளார்.
