தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/செயின் பறிப்பு திருடனை பிடித்த நிஜ 'ஹீரோ' அண்ணாநகர் சிறுவனுக்கு குவிகிறது பாராட்டு

செயின் பறிப்பு திருடனை பிடித்த நிஜ 'ஹீரோ' அண்ணாநகர் சிறுவனுக்கு குவிகிறது பாராட்டு

செயின் பறிப்பு திருடனை பிடித்த நிஜ 'ஹீரோ' அண்ணாநகர் சிறுவனுக்கு குவிகிறது பாராட்டு


ADDED : ஏப் 19, 2018 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2018 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, பெண் டாக்டரிடம், 10 சவரன் செயினை பறித்து தப்பிய திருடனை, சினிமா, 'ஹீரோ' போல, தனி நபராக, துணிச்சலாக விரட்டிச் சென்று பிடித்த சிறுவனுக்கு, பாராட்டுகள் குவிகின்றன. போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், சிறுவனை அழைத்து பாராட்டி, வெகுமதியும் வழங்கினார்.சென்னை அண்ணாநகர், 'டி பிளாக்'கைச் சேர்ந்தவர் அமுதா, 50. டாக்டரான இவர், கணவர், மகளுடன் வசிக்கிறார். வீட்டின் கீழ்தளத்தில், 'கிளினிக்' நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, கிளினிக்கில் தனியாக இருந்தார். அங்கு வந்த மர்ம நபர் ஒருவன், 'உறவுக்கார பெண், வயிற்று வலியால் துடிக்கிறார்; எவ்வளவு நேரம் இருப்பீர்' என, கேட்டுள்ளான்.அவனிடம், 'அந்த பெண்ணை அழைத்து வாருங்கள்; காத்திருக்கிறேன்' என, அமுதா தெரிவித்தார். 10 நிமிடங்களுக்கு பின், முகத்தில் கைக்குட்டை கட்டி வந்த மர்ம நபர், கத்திமுனையில், அமுதாவிடம் இருந்து, 10 சவரன் செயினை பறித்து தப்பினான்.துணிச்சல்அப்போது அமுதா, 'செயினை அறுத்துக்கொண்டு ஓடுகிறான்; பிடியுங்கள்' என, கூச்சலிட்டார். அங்கு நின்ற, அண்ணாநகர், சி.வி.நகர், பாரதி தெருவைச் சேர்ந்த, சிறுவன் சூர்யா, 17, துணிச்சலாக, சினிமா கதாநாயகன் போல், செயின் பறிப்பு திருடனை, மின்னல் வேகத்தில் துரத்தி உள்ளான்.அரை, கி.மீட்டர் துாரம் ஓடியதும், திருடன் மூச்சுவிட முடியாமல், திணறி உள்ளான். சிறுவன், அவனை பிடிக்க முயன்றான். 'அருகில் வந்தால், கொன்றுவிடுவேன்' என, அந்த திருடன், சிறுவனை மிரட்டி உள்ளான். அதற்கெல்லாம் அசராத அந்த சிறுவன், அசுர வேகத்தில், திருடனை பிடிக்க முயன்றுள்ளான்.சிறுவன் பாய்ந்து வருவதை அறிந்த திருடன், அவனை ஏமாற்ற, செயினை அறுத்து, பாதியை கீழே போட்டு, ஓட்டம் பிடித்துள்ளான். செயினை கீழே குனிந்து எடுத்தால், திருடனை பிடிக்க முடியாது என கருதிய சிறுவன், காலால் துாக்கி வீசி, பந்தை பிடிப்பது போல், செய்னை, 'கேச்' பிடித்து, திருடனை துரத்தி உள்ளான்.திருடனை நெருங்கிய அந்த சிறுவன், சட்டையை பிடித்து இழுத்து, அவனது காலுக்கு அடியில், தன் காலை நீட்டி, திருடனை கீழே தள்ளினான். பின், திருடனின் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து, முகத்தில் ஓங்கி குத்தினான். இதில், நிலை குலைந்த திருடனுக்கு, ஒரு பல் உடைந்தது.இதையடுத்து, திருடனிடம் இருந்து, மீதியிருந்த செயினையும் மீட்டுள்ளான்.அதற்குள், அந்த பகுதியில் இருந்தோர் திரண்டுவிட்டனர். அருகில் உள்ள கடையில் இருந்து, தண்ணீர் பாக்கெட்டுகளை வரவழைத்த சிறுவன், திருடன் முகத்தில் தெளித்து, உயிர் பிழைக்கவும் வைத்துள்ளான்.இதையடுத்து, திருடன், அண்ணாநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். அவனிடம் இருந்து மீட்ட செயினை, போலீசாரிடம், சிறுவன் சூர்யா கொடுத்தான்.இந்த தீர செயல் காரணமாக, சிறுவன் சூர்யாவுக்கு, பல தரப்பிலும் பாராட்டுகள் குவிகின்றன.போலீசாரின் விசாரணையில், திருடன், திருவள்ளூர் மாவட்டம், கண்டிகை அடுத்த, தர்மாபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த, ஜானகிராமன், 26, என, தெரியவந்தது. அவனை கைது செய்த போலீசார், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

'வேடிக்கை பார்த்தனர்'

சிறுவன் சூர்யா கூறியதாவது:ஒன்பதாம் வகுப்பு படித்துள்ளேன். தந்தை நாராயணன் டெய்லர். தாய் எல்லம்மாள். நான் 'ஏசி மெக்கானிக்' கடையில் வேலை பார்க்கிறேன். மாலையில் டாக்டர் அமுதாவின் 'கிளினிக்' எதிரே என் உறவினர் நடத்தி வரும் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைக்கு செல்வேன்.நேற்று முன்தினம் இரவு நான் அந்த கடைக்கு எதிரே நின்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் சுவர் ஏறி குதித்து டாக்டர் அமுதாவின் 'கிளினிக்' உள்ளே சென்றான். அவன் செயின் பறித்து தப்பிய போது துரத்தி பிடித்தேன்.திருடனை துரத்தும் போது பலரை உதவிக்கு அழைத்தேன். ஒருவர் கூட வரவில்லை. அவனை பிடித்தவுடன் அலைபேசியில் 'வீடியோ' எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். இந்த நிலை மாற வேண்டும். குற்றவாளிகளை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவன் கூறினான்.

குவியும் பாராட்டு!திருடனை, தனி ஒருவனாக, துணிச்சலுடன் பிடித்த, சிறுவன் சூர்யாவுக்கு, போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தோளில் தட்டிக்கொடுத்து, வெகுமதி வழங்கி பாராட்டினர்.போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் கூறுகையில், ''சிறுவனின் துணிச்சல் பாராட்டுக்குரியது. குற்றங்களை குறைக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us