உள்ளடக்கத்திற்கு செல்ல

நேபாளத்தில் யாத்ரீகர்களை மீட்க நடவடிக்கை: முதல்வர் பதில்
நேபாளத்தில் யாத்ரீகர்களை மீட்க நடவடிக்கை: முதல்வர் பதில்
ADDED : ஜூலை 04, 2018 11:36 AM

அ நிறம் | அளவு
சென்னை: சட்டசபையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசும் போது, கைலாஷ் யாத்திரை சென்ற தமிழர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு முதல்வர் பழனிசாமி அளித்த பதில்: யாத்ரீகர்களை பாதுகாப்பாக திரும்ப அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்டவர்கள் இன்று மாலை சென்னை திரும்புவார்கள். தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிக்கியதாக தகவல் வந்ததும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். வெளியுறவு அமைச்சகத்திடம் தொடர்பு கொண்டு, தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
