உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 29, 2018 11:53 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: ''தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு முன், பிரதமர் மோடி தலைமையில், மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்', என, பா.ஜ., மாநில துணை தலைவர் சுரேந்திரன் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதால், அதற்கான வேலைகளில், பா.ஜ., இறங்கியுள்ளது. 20 மாநிலங்களை, பா.ஜ., கைப்பற்றிஉள்ளது. கடந்த முறை தமிழகத்தில் ஒரு, எம்.பி., தொகுதியை மட்டும், பா.ஜ., வென்றது. வரும் தேர்தலில், அனைத்து தொகுதிகளையும், பா.ஜ., கைப்பற்றும். லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, பிரதமர் தலைமையில், மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
