ஆகஸ்ட் 12, 1979
ஏ.வி.
மெய்யப்பர் செட்டியார்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், ஆவிச்சி செட்டியார் - -இலக்குமி ஆச்சி தம்பதிக்கு மகனாக, 1907, ஜூலை 28ல் பிறந்தார்.கடந்த, 1945, நவ., 14ல், ஏ.வி.எம்.புரொடக் ஷன்ஸ் என்ற நிறுவனத்தை, சென்னை சாந்தோமில் நிறுவினார். விடுதலைக்கு பின் அது, கோடம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. 1952ல், இந்நிறுவன தயாரிப்பில், சிவாஜி கதாநாயகனாக அறிமுகமான, பராசக்தி படம் வசூல் சாதனை படைத்தது.மெய்யப்பர், 167 படங்களை தயாரித்தும், சில படங்களை இயக்கியும் உள்ளார். நாம் இருவர், சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், களத்துார் கண்ணம்மா போன்ற படங்கள் வெற்றி பெற்றன. திரைத்துறை மட்டுமின்றி, ஏ.வி.எம்., அறக்கட்டளை எனும் அமைப்பை உருவாக்கி, நற்பணிகளை செய்தவர்.கடந்த, 1979, ஆக.,12ல் காலமானார். அவர் இறப்புக்கு பின், அவரது மகன்கள் பாலசுப்பிரமணியம், சரவணன் ஆகியோர் இந்நிறுவனத்தை நடத்துகின்றனர். ஏ.வி.மெய்யப்பர் செட்டியார் இறந்த தினம் இன்று.