UPDATED : ஜன 25, 2019 11:04 AM
ADDED : ஜன 25, 2019 10:45 AM

சென்னை : ஆசைகள் பட்டியலில் ஓட்டளிப்பதையும் வையுங்கள் என நடிகரும், மக்கள் நீதி மைய கட்சி தலைவருமான கமல் கேட்டுக் கொண்டுள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஓட்டளிக்கும் உரிமை விதியை மாற்றவும், எதிர்காலத்தை உருவாக்கும் வாய்ப்பையும் அளிக்கும். நாட்டின் சுதந்திரத்தை பொறுப்புணர்வுடன் உருவாக்குவோம். இளைஞர்கள் தங்களின் ஆசை பட்டியலில் ஓட்டளிப்பதை முதன்மை வைக்க வேண்டும். ஓட்டளிக்கும் உரிமையை நான் 3 அல்லது 4 வது இடத்தில் வைத்துள்ளேன்.
ஓட்டளிக்காத எனது நண்பர்கள் தற்போது மோசமான நிலையில் உள்ளனர். ஓட்டளிக்காததன் விளைவை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஊழலுக்கு எதிரான போராட்டம் புதிய அரசியல் கலாச்சாரமாக மாறி, இளைஞர்களை ஒன்றிணைத்துள்ளது. இளைஞர்கள் விடாப்பிடியாக இதனை கடைபிடிக்க வேண்டும். இளைஞர்களின் பலத்தாலேயே வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
