தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மோடி பிரதமரானால் நாடு வளம்பெறும்: முதல்வர் இ.பி.எஸ்.,

மோடி பிரதமரானால் நாடு வளம்பெறும்: முதல்வர் இ.பி.எஸ்.,

மோடி பிரதமரானால் நாடு வளம்பெறும்: முதல்வர் இ.பி.எஸ்.,


UPDATED : ஏப் 02, 2019 03:14 PM

ADDED : ஏப் 02, 2019 03:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 02, 2019 03:14 PM ADDED : ஏப் 02, 2019 03:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தூத்துக்குடி: மோடி மீண்டும் பிரதமரானால் நாடு வளம்பெற்று செழிக்கும் என முதல்வர் இ.பி.எஸ்., கூறினார்.

தூத்துக்குடி பா.ஜ., வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது: நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் தகுதி வாய்ந்தவர் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும். நமது கூட்டணியை பார்த்து மிரண்டுபோய் என்ன பேசுவது என தெரியாமல் ஸ்டாலின் உள்ளார்.40 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

சில துரோகிகள் செய்த சதி காரணமாக 18 தொகுதிகளில் இடை த்தேர்தல் வருகிறது. இடைத்தேரதல் மூலம் சதிகாரர்களை வீழ்த்தி நாம் வெற்றி பெற வேண்டும்.தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றுவதால் மக்கள் ஆதரவு தருகிறார்கள்.

ஏழைகளுக்கான திட்டங்களை தடுக்கும் கட்சி திமுக. தேர்தல் முடிந்த உடன் ரூ.2 ஆயிரம் நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படும். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு திமுக தான் அனுமதி வழங்கியது. திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியிருக்கலாம். இந்த விவகாரத்தில் திமுக நாடகம் போட்டு, மக்களை ஏமாற்றுகிறது. அதிமுக அரசு தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது. ஓட்டுக்காக , திமுக பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறது.கனிமொழியை வீழ்த்தும் சக்தி தமிழிசைக்கு மட்டுமே உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us