sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு

/

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு


UPDATED : நவ 15, 2019 05:53 AM

ADDED : நவ 13, 2019 11:41 PM

Google News

UPDATED : நவ 15, 2019 05:53 AM ADDED : நவ 13, 2019 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதையடுத்து தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு; விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி; திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி; வேலுார் மாவட்டத்தை பிரித்து திருப்பத்துார் ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தது. அதன்படி புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு நேற்று முன்தினம் அரசாணை வெளியிடப்பட்டது. ஏற்கனவே 32 மாவட்டங்கள் இருந்தன. புதிய மாவட்டங்களுடன் சேர்த்து தற்போதைய எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. புதிய மாவட்டங்கள்;

அதில் இடம்பெறும் தாலுகாக்கள் விபரம்:

செங்கல்பட்டு மாவட்டம்


* செங்கல்பட்டு

* மதுராந்தகம்

* செய்யூர்

* திருக்கழுக்குன்றம்

* திருப்போரூர்

* தாம்பரம்

* பல்லாவரம்

* வண்டலுார்

காஞ்சிபுரம் மாவட்டம்


* காஞ்சிபுரம்

* உத்திரமேரூர்

* ஸ்ரீபெரும்புதுார்

* வாலாஜாபாத்

* குன்றத்துார்

கள்ளக்குறிச்சி மாவட்டம்




* கள்ளக்குறிச்சி

* சங்கராபுரம்

* சின்னசேலம்

* திருக்கோவிலுார்

* உளுந்துார்பேட்டை

* கல்வராயன் மலை

விழுப்புரம் மாவட்டம்


* விழுப்புரம்

* விக்கிரவாண்டி

* வானுார்

* திருவெண்ணெய்நல்லுார்

* திண்டிவனம்

* செஞ்சி

* மேல்மலையனுார்

* மரக்காணம்

* கண்டச்சிபுரம்

திருப்பத்துார் மாவட்டம்


* திருப்பத்துார்

* வாணியம்பாடி

* நாட்றாம்பள்ளி

* ஆம்பூர்

ராணிப்பேட்டை மாவட்டம்


* ராணிப்பேட்டை

* வாலாஜா

* ஆற்காடு

* நெம்மேலி

* அரக்கோணம்

வேலுார் மாவட்டம்


* வேலுார்

* அணைக்கட்டு

* காட்பாடி

* குடியாத்தம்

* பேரணாம்பட்டு

* கே.வி.குப்பம்

தென்காசி மாவட்டம்


* தென்காசி

* செங்கோட்டை

* கடையநல்லுார்

* சிவகிரி

* வீரகேரளம்புதுார்

* சங்கரன்கோவில்

* திருவேங்கடலம்

* ஆலங்குளம்

திருநெல்வேலி மாவட்டம்


* திருநெல்வேலி

* பாளையங்கோட்டை

* மானுார்

* நாங்குநேரி

* ராதாபுரம்

* அம்பாசமுத்திரம்

* சேரன்மாதேவி

* திசையன்விளை

புதிய அரசாணையின்படி புதிய தாலுகாக்கள் கோட்டங்கள் மாவட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரும்படி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தனி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காகும் செலவு குறித்த கருத்துருவை வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய தாலுகாக்கள்


காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்துார்; செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலுார்; விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லுார்; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலை தாலுகா வேலுார் மாவட்டத்தில் கே.வி.குப்பம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதுார் கோட்டம்; தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் கோட்டம்; வேலுார் மாவட்டத்தில் குடியாத்தம் கோட்டம்; திருப்பத்துார் மாவட்டத்தில் வாணியம்பாடி கோட்டம்; ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

வார்டு சீரமைப்பு பணி நிறைவு


புதிய மாவட்டங்களில் ஏற்கனவே ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி வார்டு வரையறை பணி நிறைவடைந்துள்ளது. எனவே உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி புதிய மாவட்டங்கள் பிரிப்பால் எந்த பாதிப்பும் இல்லை. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் அதை அரசு செய்து கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us