sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

/

தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு


UPDATED : மே 06, 2021 07:07 PM

ADDED : மே 06, 2021 04:51 PM

Google News

UPDATED : மே 06, 2021 07:07 PM ADDED : மே 06, 2021 04:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் நாளை (மே 7) அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறவுள்ள சூழலில், அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில்,தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 133 இடங்களில் வெற்றிப்பெற்று தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. நாளை (மே 7) காலை 9 மணியளவில் கவர்னர் மாளிகையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கிறார். இந்நிலையில், ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அதில் முதல்வர் ஸ்டாலினுக்கு பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, காவல், மாவட்ட வருவாய் அலுவலர்கள், சிறப்பு திட்ட செயலாக்கம், மாற்று திறனாளிகள் நலன் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Image 853267

மற்ற அமைச்சர்கள் விவரம்:


அமைச்சர்கள் - இலாகா

* துரைமுருகன் - நீர்வளத்துறை

* கே.என்.நேரு - நகர்ப்புற வளர்ச்சித் துறை

* ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை

* க.பொன்முடி - உயர்கல்வித்துறை

* எ.வ.வேலு - பொதுப்பணித்துறை

* எம்.ஆர்.பன்னீர்செல்வம் - வேளாண்மை - உழவர் நலத்துறை

* கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை

* தங்கம் தென்னரசு - தொழில்துறை

* எஸ்.ரகுபதி - சட்டத்துறை

* முத்துசாமி - வீட்டு வசதித்துறை

* கே.ஆர்.பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித் துறை

* தா.மோ.அன்பரசன் - ஊரகத் தொழிற்துறை

* மு.பெ.சாமிநாதன் - செய்தித்துறை

* பி.கீதா ஜீவன் - சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை

* அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை

* ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத்துறை

* கா.ராமச்சந்திரன் - வனத்துறை

* சக்கரபாணி - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை

* வி.செந்தில் பாலாஜி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

* ஆர்.காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை

Image 853269

* மா.சுப்பிரமணியன் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

* பி.மூர்த்தி - வணிகவரி மற்றும் பதிவுத்துறை

* எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

* பி.கே.சேகர்பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலையதுறை

Image 853268

* பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை

* சா.மு.நாசர் - பால்வளத்துறை

* செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை

* அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக்கல்வித்துறை

* சிவ.வீ.மெய்யநாதன் - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை

* சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை

* த.மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை

* மா.மதிவேந்தன் - சுற்றுலாத்துறை

* என்.கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை

2006ல் கருணாநிதி தலைமையில் அமைச்சர்களாக இருந்த 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 15 பேருக்கு புதிய அமைச்சர்களாக வாய்ப்பு கிடைத்துள்ளது.பொதுப்பணித்துறையை இரண்டாக பிரித்து நீர்வளத்துறை சேர்க்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வில் இருந்தவர்கள்


இன்று வெளியான அமைச்சர்கள் பட்டியலில் வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, சேகர்பாபு, ராஜகண்ணப்பன் ஆகியோார் அ.தி.மு.க.,விலிருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தவர் ஆவர். இவர்கள் அமைச்சர்களாகியுள்ளனர்.






      Dinamalar
      Follow us