தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/3 புதிய சட்டம்; 9 திருத்தங்கள் சட்டசபையில் நிறைவேற்றம்

3 புதிய சட்டம்; 9 திருத்தங்கள் சட்டசபையில் நிறைவேற்றம்

3 புதிய சட்டம்; 9 திருத்தங்கள் சட்டசபையில் நிறைவேற்றம்


ADDED : மே 17, 2013 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2013 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சட்டசபையில் நேற்று, மூன்று புதிய சட்டங்களும், ஒன்பது சட்ட திருத்த மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. சிதம்பரம் பல்கலைக் கழக நிர்வாகத்தை அரசு ஏற்பது, தமிழ்நாடு சொத்து வரி வாரியம் அமைப்பது, தமிழ்நாடு முத்திரைத் தாள் சட்டம் ஏற்படுத்துவது என, மூன்று புதிய சட்ட மசோதாக்கள், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

மேலும், வழங்கறிஞர்கள் சேம நல நிதியை உயர்த்துவது, தமிழ்நாடு கேளிக்கை வரி, மதிப்புக் கூட்டு வரி, இந்திய கூட்டாண்மை சட்டம், தொழிற் தகராறுகள் சட்டம் ஆகியவற்றைத் திருத்த, ஒன்பது மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றின் மீது, சட்டசபையில் நேற்று குரல் வாக்கெடுப்பு நடத்தி, சட்ட மசோதாக்கள் நிறைவேறியதாக, சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us