தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திடீர் என மாயமான இந்து பிரமுகர் திரும்பினார் : கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்டதாக தகவல்

திடீர் என மாயமான இந்து பிரமுகர் திரும்பினார் : கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்டதாக தகவல்

திடீர் என மாயமான இந்து பிரமுகர் திரும்பினார் : கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்டதாக தகவல்


ADDED : ஆக 01, 2013 12:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2013 12:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை : கோவையில் காணாமல் போன, இந்து அமைப்பு பிரமுகர், நேற்று திரும்பினார். மர்ம நபர்கள், கேரளாவுக்கு கடத்தி சென்றபோது, தப்பி வந்ததாக, அவர் தெரிவித்தார். கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்தவர், சக்திவேல், 49; பானி பூரி வியாபாரி; இந்து மக்கள் கட்சி - அனுமன் சேனா, மாநில இணைத் தலைவர். இவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த, 28ம் தேதி, நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில், கட்சி நிகழ்ச்சியை முடித்து, கோவைக்கு திரும்பியவர், திடீரென காணாமல் போனார். அவரது மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இவரது மனைவி, குனியமுத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார், பல இடங்களிலும் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று பகல், 12:00 மணிக்கு, சக்திவேல், கோவை கலெக்டர் அலுவலகம் வந்தார்.

அங்கு, நிருபர்களிடம் கூறியதாவது: நான், கோத்தகிரியில் இருந்து திரும்பி வந்து, கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாண்டில், நிறுத்தப்பட்டிருந்த பைக்கை எடுக்கச் சென்றேன். அப்போது, ஒருவர் போலீஸ் உடையில் வந்தார். அவர், பாதுகாப்புக்காக வந்திருப்பதாகக் கூறி, காரில் ஏற்றிக் கொண்டார். அப்போது, இன்னொருவர், கர்சீப்பால் என் மூக்கை அடைத்தார். சிறிது நேரத்தில் நான் மயங்கி விட்டேன். கண் விழித்தபோது, நான் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருப்பதை அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன். கடத்தப்பட்டதை தெரிந்து கொண்ட நான், கண்களை மூடி, பேசாமல் இருந்தேன். அவர்கள், 'கல்லைக் கட்டி கடலில், இவனை வீசி விடலாம்' என, பேசிக் கொண்டனர். அதிர்ச்சி அடைந்த நான், மெதுவாகச் சென்ற காரில் இருந்து குதித்து தப்பி, கோவை வந்து விட்டேன்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார். இது தொடர்பாக, குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us