sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுரையில் குண்டுவீசி, வெட்டி இருவர் படுகொலை : கஞ்சா விற்பனை போட்டியில் நடந்த பயங்கரம்: பழிவாங்க வந்தவர் பலியான பரிதாபம்

/

மதுரையில் குண்டுவீசி, வெட்டி இருவர் படுகொலை : கஞ்சா விற்பனை போட்டியில் நடந்த பயங்கரம்: பழிவாங்க வந்தவர் பலியான பரிதாபம்

மதுரையில் குண்டுவீசி, வெட்டி இருவர் படுகொலை : கஞ்சா விற்பனை போட்டியில் நடந்த பயங்கரம்: பழிவாங்க வந்தவர் பலியான பரிதாபம்

மதுரையில் குண்டுவீசி, வெட்டி இருவர் படுகொலை : கஞ்சா விற்பனை போட்டியில் நடந்த பயங்கரம்: பழிவாங்க வந்தவர் பலியான பரிதாபம்


ADDED : ஜன 05, 2014 10:37 PM

Google News

ADDED : ஜன 05, 2014 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரத்தில், கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதத்தால், நாட்டு குண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் இருவர் கொடூரமாக கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர். குடியிருப்பு பகுதியில் அரைமணிநேரம் நடந்த இச்சம்பவத்தால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மதுரை வண்டியூர் பகுதியில், கஞ்சா விற்பனை உச்சத்தில் உள்ளது. இதுகுறித்து, போலீசிற்கு தகவல் தெரிவித்த இன்பார்மர் மதிவாணன் என்பவர், சிலமாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். இவ்வழக்கில், தே.மு.தி.க., வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி,34, அவரது சகோதரர் முருகன் உட்பட சிலர் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே, மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த ரவுடி உதயா என்ற உதயகுமார்,28, கஞ்சா விற்பனையில் இறங்கினார். இது, செந்தில்பாண்டி தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. யார் பெரியவன் என்ற ஈகோ பிரச்னையும் தலைதூக்கியது. கடந்த நவ.,9 ல், கஞ்சா விற்றதாக, கருப்பாயூரணி போலீசாரால் உதயகுமார் கைது செய்யப்பட்டார். இதற்கு செந்தில்பாண்டி தரப்பினர் தான் காரணம் எனக்கருதி, நவ.,12 ல் அவரை உதயகுமார் தரப்பினர் வெட்டினர்.

கொல்ல திட்டம்: சமீபத்தில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, செந்தில்பாண்டி வந்தார். அவரையும், தம்பி முருகனையும் கொல்ல, உதயகுமார் திட்டமிட்டார். இதற்காக, நேற்றுமுன்தினம் இரவு 10:30 மணிக்கு, சவுராஷ்டிராபுரத்தில் உள்ள முருகனின் எவர்சில்வர் பட்டறைக்கு, கூட்டாளிகளுடன் சென்றார். பட்டா கத்தி, அரிவாள், 7 நாட்டுவெடிகுண்டுகளுடன் பட்டறைக்குள் புகுந்தார்.

இருவர் படுகொலை: அங்கு,முருகனுடன், 20 பேர் வரை வேலை செய்து கொண்டிருந்தனர். செந்தில்பாண்டி இல்லை. உதயகுமார் தரப்பினர் 3 குண்டுகளை வீசி, முருகனை வெட்ட முயன்றனர். அதிர்ச்சியடைந்த முருகனின் வேலையாட்கள் சுற்றிவளைத்து, உதயகுமார் கொண்டு வந்த அரிவாளாலேயே அவரை

கொடூரமாக வெட்டி கொன்றனர். இதில், உடன் வந்த மதுரை காமராஜர் ரோடு, தூமாட்டிரங்கசாமி அய்யர் சந்தைச் சேர்ந்த கண்ணனும்,26, படுகொலையானார். உதயகுமார் கூட்டாளிகள் மணிக்கு இடது கையிலும், அருணுக்கு தலையிலும் காயம் ஏற்பட்டது. சபரிக்கு ஆள்காட்டி விரல், நடுவிரல்கள் துண்டாயின. அரைமணி நேரம் நடந்த இச்சம்பவத்தால், அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். இதற்கிடையே, காயமடைந்த உதயகுமாரின் ஆட்கள், விபத்தில் காயம்பட்டதாக கூறி, இரவு 11.15 மணிக்கு, அரசு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால், காயத்தின் தன்மையை பார்த்த டாக்டர்கள், சந்தேகப்பட்டு விசாரிக்க, தகராறில் வெட்டு விழுந்தது என்றுகூறி, அட்மிட் ஆயினர்.

4 குண்டுகள் பறிமுதல்: இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு கருப்பாயூரணி போலீசார் செல்லவும், தகவல் அறிந்து உதயகுமார் உறவினர்களும் வரவும் சரியாக இருந்தது. ஆத்திரத்தில், அப்பகுதி வாகனங்களை கைகளால் உறவினர்கள் தாக்கினர். கொலையானவர்களின் உடலை எடுத்துச் செல்ல முயன்ற நேதாஜி டிரஸ்ட் ஆம்புலன்ஸ் நிர்வாகி ஹரியை, தகடு கத்தியால் கையில் குத்தினர். இதைதொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் கிடந்த வெடிக்காத 3 குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொலையான கண்ணன் சட்டை பையில் இருந்தும் ஒரு குண்டு எடுக்கப்பட்டது.

காயம்பட்டவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, சமரசம் ஆகிவிடுவோம். பேச்சுவார்த்தைக்கு வா, என அழைத்ததன்பேரில் சென்றோம். அவர்கள் திட்டமிட்டு தாக்கினர், என்றனர். ஆனால், போலீசார் இதை நம்பவில்லை. இருதரப்பிலும் உயிருக்கு ஆபத்து இருக்கும்போது, பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை. அப்படி சமரசம் ஆகும் முடிவில் இருந்தால், வக்கீல்கள் மூலமே அதை டீல் செய்திருப்பர். எனவே, பழிவாங்கவே சென்றுள்ளனர், என்கின்றனர், போலீசார்.

காயம்பட்டவர் மயக்கம்: இதற்கிடையே, பட்டறை வாசலில் கொல்லப்பட்ட கண்ணனை முதலில் போலீசாரால் அடையாளம் காணமுடியவில்லை. அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலை அடையாளம் காட்டுமாறு, அங்கு ஏற்கனவே அட்மிட் ஆகி இருந்த உதயகுமார் கூட்டாளிகளில் ஒருவரை போலீசார் அழைத்து வந்தனர். கண்ணன் உடலை பார்த்து, கூட்டாளி அங்கேயே அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். இதை கண்ட டாக்டர்கள், காயம்பட்டவரை அழைத்து வந்து அடையாளம் காட்டுமாறு கூறியது தவறு என போலீசாரை கண்டித்தனர்.

போலீஸ் தடியடி: இரட்டை கொலையில் தலைமறைவாக உள்ளவர்கள், இன்று கோர்ட்டில் சரணடையலாம், என போலீசார் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே, உதயகுமார் உடலை, மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல, நேற்று மதியம் உறவினர்கள் முடிவு செய்தனர். போலீசார் அனுமதிக்காததால், மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை லேசாக தடியடி நடத்தி, போலீசார் கலைத்தனர். சம்பவம் நடந்த பட்டறையை மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா ஆய்வு செய்தனர்.

ஆணழகன் உதயா: இச்சம்பவத்தில் பலியான உதயகுமார், ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று வந்தவர். ஜிம் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது, கருப்பாயூரணி, அவனியா

புரத்தில் தலா ஒரு கொலை வழக்கும், 2 கொலை முயற்சி வழக்குகளும், 2 கஞ்சா வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அவனியாபுரத்தில் ரவுடி பட்டியலிலும் உள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு கைக்குழந்தையும் உள்ளனர். தற்போது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். கண்ணனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். விவசாயியான இவர், நேற்றுமுன்தினம் தான் வயலுக்கு உரமிட்டு வந்தார். நண்பர்களின் கூடாநட்பே அவரது உயிரை பறித்துள்ளது.






      Dinamalar
      Follow us