"என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒரு போதும் அஞ்சமாட்டோம்": சொல்கிறார் சீமான்
"என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒரு போதும் அஞ்சமாட்டோம்": சொல்கிறார் சீமான்
ADDED : பிப் 07, 2024 02:00 PM

சேலம்: '' என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒரு போதும் அஞ்சமாட்டோம்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இது குறித்து சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆதாரம் இல்லாமல் நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ., சோதனை நடத்துகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில், தற்போது என்.ஐ.ஏ., சோதனை செய்தது ஏன்?. என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒரு போதும் அஞ்சமாட்டோம்.
நாம் தமிழர் கட்சியை யாராலும் உடைக்க முடியாது. நான் உயிருடன் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சி இருக்கும். சரத்பவாரின் கட்சி தேசியவாத காங்கிரஸ் என உலகத்துக்கு தெரியும். சரத்பவார் தான் நிறுவனத் தலைவர். திடீரென அஜித் பவார் கட்சி என்று அறிவிக்கிறார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.
ஆஜர்
கடந்த 2017ம் ஆண்டு சேலம் மாநகர், அஸ்தம்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று(பிப்.,07) சேலம் நீதிமன்றத்தில் சீமான் ஆஜர் ஆனார்.

