திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ரெய்டுநுஎஸ்.டி.பி.ஐ., பொருளாளருக்கு சம்மன் பிரியாணி கடை உரிமையாளர் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ரெய்டுநுஎஸ்.டி.பி.ஐ., பொருளாளருக்கு சம்மன் பிரியாணி கடை உரிமையாளர் கைது
ADDED : ஆக 20, 2025 11:14 PM

திண்டுக்கல்:பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
எஸ்.டி.பி.ஐ., மாநில பொருளாளர் ஷேக் அப்துல்லா ஆஜராகவும் சம்மன் வழங்கினர். கொடைக்கானலில் பிரியாணி கடை உரிமையாளர் இம்தாத்துல்லாவை 35, கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் மத மாற்ற நடவடிக்கைகளை எதிர்த்து போராடி வந்த நிலையில் 2019ல் கும்பகோணம் அருகே திருப்புவனத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமைப்பிரிவு அதிகாரிகள் திண்டுக்கல், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
எஸ்.டி.பி.ஐ., நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகரில் பெயின்டிங் கான்ட்ராக்டர் ஷேக் அப்துல்லா 45, வீட்டில் நேற்று காலை 6:00 மணிக்கு புகுந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் 8:30 மணி வரை சோதனை நடத்தினர். இவர் எஸ்.டி.பி.ஐ., மாநில பொருளாளராக உள்ளார். அவரது கட்சி அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்ட உடைமைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் ↔ தொடர்ச்சி ௭ம் பக்கம் சென்னை என்.ஐ.ஏ., அலுவலகத்தில் ஆக., 25ல் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கினர். என்.ஐ.ஏ., சோதனையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
ஒட்டன்சத்திரம் சம்சுதீன்காலனியில் எலக்ட்ரீசியன் முகமது யாசின் 35, வீட்டிலும் சோதனை நடந்தது. இவர் ஓராண்டுக்கு முன் என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஆஜரான நிலையில் மீண்டும் இவரை விசாரணைக்குட்படுத்தும் விதம் இவரின் வீட்டில் சோதனை நடந்தது. அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தி ஆக., 25 ஆஜராக சம்மன் வழங்கினர்.
பிரியாணி கடை உரிமையாளர் கைது:
கொடைக்கானல் பில்லிஸ் வில்லா பகுதியில் முபாரக் 55, வீடு, மேல்மலை பூம்பாறை ஆம்பூர் பிரியாணி கடை உரிமையாளர் இம்தாத்துல்லா 35, வீடு, கடை, அலுவலங்கள் என 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ராமலிங்கத்தை கொலை செய்த குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக இம்தாத்துல்லாவை கைது செய்தனர். அவரது அலைபேசிகள், ஹார்ட் டிஸ்க், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ராமலிங்கம் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக கொடைக்கானலைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வங்கி பண பரிவர்த்தனைகள் ஆய்வு செய்ததில் மனைவி நிஷாவின் வங்கி கணக்கில் அதிக அளவு பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்தது. நிஷா வத்தலக்குண்டு காந்திநகர் விரிவாக்க பகுதியில் உள்ள தந்தை உமர் கத்தாப் வீட்டில் உள்ளார். அங்கும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது பேங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரிகளும் உடன் இருந்தனர்.