சென்னை, சீர்காழியில் களம் இறங்கிய என்.ஐ.ஏ.! 20 இடங்களில் திடீர் சோதனை
சென்னை, சீர்காழியில் களம் இறங்கிய என்.ஐ.ஏ.! 20 இடங்களில் திடீர் சோதனை
UPDATED : ஜன 28, 2025 10:13 AM
ADDED : ஜன 28, 2025 07:21 AM

சென்னை: சென்னை மற்றும் சீர்காழியில் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான (என்.ஐ.ஏ,) சோதனை நடைபெறுகிறது. அதிகாலை 3 மணிக்கு காரில் வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பல குழுக்களாக அவர்கள் பிரிந்து திருமுல்லைவாசல் மெயின் ரோடு, நடுத்தெரு, எம்ஜிஆர் நகர், எல்லைக்கட்டி இருப்பு தெரு பகுதிகளில் வசிக்கும் அமிர், நபின், பாசித், பைசல், இம்ரான், பைசர் அலி உள்ளிட்ட 15 வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய வழக்கு விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் சில வீடுகளில் என்ஐஏ சோதனை முடிந்த நிலையில் லேப்டாப், செல்போன், பென்டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதேபோல சென்னையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் இறங்கி இருக்கின்றனர்.