ADDED : டிச 19, 2025 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும், பயங்கரவாத செயலில் ஈடுபடுவோரை, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர்.
இம்முகமையின் இணையதளம், தற்போது புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் உள்ள, என்.ஐ.ஏ., அலுவலகங்களின் முகவரி, படங்கள் மற்றும் எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கை, பயங்கரவாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள், தேடப்படும் குற்றவாளிகளின் படங்கள், பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வசதி போன்றவை, இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

