கொல்லிமலையில் இரவு வான் பூங்கா; ஒரு கோடி ரூபாயில் மெகா 'ப்ளான்'
கொல்லிமலையில் இரவு வான் பூங்கா; ஒரு கோடி ரூபாயில் மெகா 'ப்ளான்'
ADDED : ஜன 28, 2025 02:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், ஒரு கோடி ரூபாயில், இரவு வான் பூங்கா அமைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்று தான் கொல்லிமலை. இந்த மலை 45 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த மலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி உள்ளிட்டவை உள்ளன. இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், கொல்லிமலையில், ஒரு கோடி ரூபாயில், இரவு வான் பூங்கா அமைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வானியல் பற்றிய விழிப்புணர்வு, ஒளி மாசு இல்லாத சூழல் குறித்த விழிப்புணர்வுக்காக இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.

