ADDED : அக் 17, 2024 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை, புதுச்சேரி, ஆந்திரா நெல்லுாரில் இருந்து தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளியுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நேற்று பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதன் மூலம் பாம்பன் கடலோரத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.