ADDED : ஏப் 11, 2025 12:32 AM
காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி ஆட்சி இருந்த போதுதான், இந்தியாவில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக குலாம் நபி ஆசாத் இருந்தார். இணை அமைச்சராக தி.மு.க.,வின் காந்திசெல்வன் இருந்தார்.
கடந்த 2010 டிச., 21ல், அவர்கள் கையெழுத்திட்டுத்தான், நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசிதழில் அறிவிக்கப்பட்டது. இதெல்லாமே ஆவணங்களாக உள்ளன. இதை தி.மு.க., உள்ளிட்ட எந்தக் கட்சியும் மறுக்க முடியாது. இதெல்லாம் தி.மு.க.,வுக்கு நன்கு தெரிந்தும், கேள்வி கேட்க ஆள் இல்லை என்ற தைரியத்தில், நீட் தேர்வுக்கு எதிராக நாடகம் நடத்துகிறது.
நீட் தேர்வு நடத்துவது தவறு என்றால், அதற்காக தி.மு.க., முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டியது, தன் கட்சியை சேர்ந்த காந்தி செல்வன் மீதுதான். அதை செய்யாமல், நீட் தேர்வை ரத்து செய்ய வைக்க முடியாது என்று தெரிந்தும், தமிழக மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடி கொண்டிருக்கிறது தி.மு.க.,
சரவணன், மருத்துவரணி இணை செயலர், அ.தி.மு.க.,

