ADDED : டிச 06, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தெலுங்கானா மாநிலம் ைஹதராபாதில் இருந்து சென்னைக்கு, சார்மினார் விரைவு ரயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக, பயணியர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை ஆய்வு செய்ய, ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய, தெற்கு மத்திய ரயில்வேக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால், தெற்கு மத்திய ரயில்வே, சார்மினார் விரைவு ரயில், மற்ற தடத்தில் இணைப்பு ரயிலாக இயக்கப்பட உள்ளதால், கன்னியாகு மரிக்கு நீட்டிப்பு செய்ய முடியாது என, தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால், தென் மாவட்ட ரயில் பயணியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

