மின் வாரிய தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு இல்லை
மின் வாரிய தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு இல்லை
ADDED : நவ 05, 2026 08:39 PM
சென்னை: மின் வாரிய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன், சென்னையில் அதிகாரிகள் இன்று (நவ.,5) நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை.
தமிழக மின் வாரியத்தில் காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்பது தொழிற்சங்கத்தினர் வரும், 11ம் தேதி காலை, 6:00 மணி முதல், 12ம் தேதி காலை, 6:00 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். சங்கங்களின் நிர்வாகிகளுடன், சென்னை அண்ணா நகரில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலக அதிகாரிகள் இன்று பேச்சு நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படவில்லை. வரும், 10ம் தேதி மீண்டும் பேச்சு நடக்க உள்ளது.
இது குறித்து, தமிழக மின் வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷனின் பொதுச்செயலர் சேக்கிழார் கூறுகையில்,‘‘கூட்டத்தில் மின் வாரிய அதிகாரிகள தெரிவித்த பதில் ஏற்புடையதாக இல்லை. எழுத்துப்பூர்வமான பதிலை அளிக்க வேண்டும் என, சங்கத்தினர் கேட்டனர். இதனால் வரும், 10ம் தேதி காலை மீண்டும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு நடக்க உள்ளது. போராட்டத்தை கைவிடும்படி, நிர்வாகம் தெரிவிப்பதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்,’’ என்றார்.
