ADDED : ஜன 27, 2026 08:23 AM

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல், வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. தமிழகத்தில், 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், தேர்தல் கமிஷன், கடந்த ஆண்டு இறுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் ஈடுபட்டது.
வரைவு வாக்காளர் பட்டியலில், 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்ட நிலையில், 5.44 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, வரும் 30ம் தேதி வரை, தேர்தல் கமிஷன் அவகாசம் அளித்துள்ளது. தேசிய வாக்காளர் தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசு சார்பில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில், தேர்தல் கமிஷன் வாகனம் இடம் பெறும்.
வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அந்த வாகனம் வடிவமைக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் கமிஷன் வாகனம் இடம் பெறாதது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

