ADDED : பிப் 29, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அரசு துறைகளில், கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ., 108; இளநிலை உதவியாளர் 2,604; டைப்பிஸ்ட் 1,705; ஸ்டெனோ டைப்பிஸ்ட் 445 என, 6,244 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான குரூப் - 4 தேர்வு, ஜூன் 9ல் நடக்க உள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 30ல் துவங்கியது; நேற்று முன்தினத்துடன் பதிவு முடிந்தது.
கடைசி நாளில், இணையதள சர்வர் பிரச்னையால் அவகாசம் நீட்டிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வரை இதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இதுவரை, 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள தாக தெரிகிறது.
தேர்வு தொடர்பான கூடுதல் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின் www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

