தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வருமானம் இல்லை; ஹரி நாடார் தகவல்

வருமானம் இல்லை; ஹரி நாடார் தகவல்

வருமானம் இல்லை; ஹரி நாடார் தகவல்


UPDATED : ஏப் 05, 2026 06:44 AM

ADDED : ஏப் 05, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 05, 2026 06:44 AM ADDED : ஏப் 05, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'சிறையில் இருப்பதால், தனக்கு வருமானம் இல்லை' என, ஆலங்குளம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஹரி நாடார், தனது வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டசபை தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக, ஹரி நாடார் களமிறங்குகிறார். பல்வேறு வழக்குகளில் கைதாகி, சிறையில் இருக்கும் அவர், அங்கிருந்தபடி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தனது வேட்பு மனுவில், ' சிறையில் இருப்பதால், 2021 - 22ம் நிதியாண்டு முதல், 2024 - 25ம் நிதியாண்டு வரை, தனக்கு வருமானம் இல்லை' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், '2.50 லட்சம் ரூபாய் கையிருப்பு உள்ளது. வங்கி கணக்கு இல்லை. ஆறு உயர் ரக கார்கள், 11 கிலோ 650 கிராம் எடையில், 17.06 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் உள்ளன' என குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்து மதிப்பு, 25.76 கோடி ரூபாய்; அசையா சொத்தாக, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு உள்ளது. மொத்தம், 24 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us