எத்தனை தடைகள் வந்தாலும் வள்ளலாருக்கு மையம் அமைப்போம்
எத்தனை தடைகள் வந்தாலும் வள்ளலாருக்கு மையம் அமைப்போம்
ADDED : ஜன 23, 2025 07:14 PM
சென்னை:ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் அளித்த பேட்டி:
ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி, திருப்பரங்குன்றம் மலை பாதையில் அசைவம் உண்டது குறித்து செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடக்கிறது. எல்லா விஷயங்களையும் போல, இதிலும் நியாயத்தின் அடிப்படையில் அரசு பணிகள் இருக்கும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியலில் இருந்து புறம் தள்ளப்பட்டுள்ளார். அதிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொள்வதற்காக, அவர் தேவையில்லாத சர்ச்சைகளை உண்டு பண்ணுகிறார். புறம் தள்ளபப்ட்ட அவர், தன்னை மீண்டும் அடையாளப்படுத்திக் கொள்ள ஈ.வெ.ரா., குறித்த கருத்துக்களை சர்ச்சையாக்கி வருகிறார். அவர் சொல்லும் விஷயங்களில் அர்த்தம் எதுவும் இல்லை.
வள்ளலார் சர்வதேச மையம், தமிழக அரசின் நிதியில் கட்டப்பட்டு வருகிறது. இதில், பி - பிரிவு பணிக்கு தடை கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்றனர். அந்த வழக்கு, வரும் 24ல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எத்தனை தடைகள் வந்தாலும் சரி, நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடத்தி, அதை சாதித்துக் காட்டுவோம். திட்டமிட்டபடி யாவது சர்வதேச மையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

