sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எந்த ஷாவாக இருந்தாலும் தமிழகத்தை ஆள முடியாது நான் இருக்கும்வரை அமித் ஷா திட்டம் பலிக்காது * அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

/

எந்த ஷாவாக இருந்தாலும் தமிழகத்தை ஆள முடியாது நான் இருக்கும்வரை அமித் ஷா திட்டம் பலிக்காது * அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

எந்த ஷாவாக இருந்தாலும் தமிழகத்தை ஆள முடியாது நான் இருக்கும்வரை அமித் ஷா திட்டம் பலிக்காது * அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

எந்த ஷாவாக இருந்தாலும் தமிழகத்தை ஆள முடியாது நான் இருக்கும்வரை அமித் ஷா திட்டம் பலிக்காது * அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

2


ADDED : ஏப் 18, 2025 07:48 PM

Google News

ADDED : ஏப் 18, 2025 07:48 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''அமித் ஷா அல்ல, எந்த ஷாவாக இருந்தாலும், தமிழகத்தை ஆள முடியாது. நான் இருக்கும் வரை அவரது திட்டம் பலிக்காது,'' என, முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு விழாவில், அவர் பேசியதாவது:

நாட்டிற்கே முன்னோடியாக பல முற்போக்கு திட்டங்களை, அரசு செய்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் தன்னம்பிக்கை வளர்ந்திருக்கிறது; தமிழகமும் வளர்ந்திருக்கிறது. இதைத்தான் சிலரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. ஆட்சியின் மேல் நியாயமாக எந்த குறையும் சொல்ல முடியாமல், இப்போது அவதுாறு பரப்பி வருகின்றனர்.

சட்டம் - ஒழுங்கு, அரசு நிர்வாகம் என அனைத்திலும், தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இருக்கும் சில எதிர்க்கட்சிகள், பொறுப்பான கட்சிகளாக நடந்து கொள்ளாமல், தமிழகத்திற்கே எதிரி கட்சிகளாக செயல்படுகின்றன. தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் இழைக்ககூடிய கூட்டத்துடன் உறவாடி, தமிழகத்தையே அடகு வைக்க வேண்டும். இதுதான் அந்த சந்தர்ப்பவாதிகளின் ஒரே எண்ணமாக இருக்கிறது.

'நீட்' தேர்வு எதிர்ப்பு, மும்மொழி கொள்கை நிராகரிப்பு, வக்ப் சட்டம் எதிர்ப்பு, லோக்சபா தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்று திரட்டுவதாக இருந்தாலும், நாம் தான் இந்திய அளவில் ஓங்கி குரல் கொடுத்து கொண்டிருக்கிறோம். மாநில உரிமையின் அகில இந்திய முகமாக தி.மு.க.,தான் இருக்கிறது.

சமீபத்தில், சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாம் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லாமல், திசை திருப்புவதற்காக இதையெல்லாம் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்கிறார். இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து தான் தமிழகம் போராடுகிறது. மாநிலங்களின் உரிமைகளை கேட்பது தவறா?

நீங்கள் எதையும் செய்யாத காரணத்தால் தான், கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம். தி.மு.க.,வின், 'பவர்' என்ன என்று, தமிழக மக்களுக்கு மட்டுமல்ல; இப்போது இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. உண்மை இப்படி இருக்கும் போது திசை மாறி சென்று கொண்டிருப்பவர்கள், திசை காட்டிகளாக இருக்கிற எங்களை பார்த்து திசை திருப்புகிறோம் என்று புலம்ப வேண்டாம்.

அமித் ஷா விடம் நான் கேட்கிறேன்...

'நீட்' தேர்வில் விலக்கு தருவோம் என்று, உங்களால் சொல்ல முடியுமா?

ஹிந்தியை திணிக்க மாட்டோம் என்று உறுதியளிக்க முடியுமா?

தமிழகத்திற்கு இவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்திருக்கிறோம் என்று பட்டியலிட முடியுமா?

தொகுதி சீரமைப்பால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையாது என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா?

நாங்கள் செய்வது திசை திருப்புவது என்றால், இதற்கெல்லாம் தெளிவான பதிலை தமிழக மக்களுக்கு ஏன் அமித் ஷா கொடுக்கவில்லை.

சிறிது நாட்களுக்கு முன்னால் பிரதமர் மோடி, ராமேஸ்வரம் பாலத்தை திறந்து வைப்பதற்கு வந்தார். எவ்வளவு கொடுத்தாலும், இங்கே அழுகின்றனர் என்று பேசி விட்டு போயிருக்கிறார். நான் மிகுந்த அடக்கத்தோடு, மரியாதையோடு பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புவது, மத்திய அரசிடம் கையேந்தி நிற்க, மாநிலங்கள் என்ன பிச்சைகாரர்களா?

நீங்கள் கேட்டதை நான் நினைவுபடுத்துகிறேன். குஜராத் முதல்வராக இருந்தபோது, 'கவர்னர்கள் வாயிலாக தனி ராஜாங்கம் செய்கின்றனர். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது' என, மோடி புகார் சொன்னார்.

இப்போது நாங்கள் கேட்டால் மட்டும் அழுகின்றனர் என்று சொல்வது, எந்த வகையில் நியாயம்; நான் கேட்பது அழுகை இல்லை; அது தமிழகத்தின் உரிமை. நான் அழுது புலம்புவனும் இல்லை. ஊர்ந்து போய் யார் காலிலும் விழுகிறவனும் இல்லை. உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்.

எந்த மாநில அரசும் செய்யாத வகையில், நாங்கள் அமைத்திருக்கிற மாநில சுயாட்சி குழு வாயிலாக, அனைத்து மாநிலங்களின் நியாயமான உரிமையையும் பெற்று தருவோம். மாநிலங்கள் சுயாட்சி பெற்றவையாக இருந்தால் தான், இங்கே உள்ள மக்களுக்கு தேவையானவற்றை செய்ய முடியும். மத்திய பா.ஜ., அரசு எல்லா வகையிலும் நமக்கு தடையை ஏற்படுத்துகிறது.

எப்படியெல்லாம் தமிழக வளர்ச்சிக்கு குடைச்சல் கொடுக்க முடியும் என்று யோசித்து, அனைத்து ரூபத்திலும் மத்திய அரசு அதை செய்கிறது. ஆனால், இது எல்லாவற்றையும் மீறி, மத்திய அரசே வெளியிடுகிற அனைத்து தரவரிசைகளிலும், அனைத்து புள்ளிவிவரங்களிலும், தமிழகம்தான் முதன்மை இடத்தை மீண்டும் மீண்டும் பிடித்து கொண்டிருக்கிறது. நம்முடைய திறமையான நிர்வாகம் தான் இதற்கு காரணம். பா.ஜ., ஏற்படுத்துகிற தடைகளை எல்லாம் ஒவ்வொன்றாக சட்டபூர்வமாக உடைத்தெறிவோம்.

மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு சவாலாக ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

டில்லியின் ஆளுகைக்கு தமிழகம் என்றைக்குமே அடிபணியாது. அப்படி ஒரு தனி குணம், ஒரு தனித்தன்மை கொண்டவர்கள் நாங்கள். மற்ற மாநிலங்களுககு சென்று, அங்கே உள்ள கட்சிகளை உடைத்து, 'ரெய்டு' வாயிலாக மிரட்டி, ஆட்சி அமைக்கிற உங்களுடைய 'பார்முலா' இங்கே வேலைக்கு ஆகாது; நீங்கள் ஏமாற வேண்டாம்.

வரும் 2026ம் ஆண்டும் தி.மு.க., ஆட்சிதான். தமிழகம் எப்போதுமே டில்லிக்கு, 'அவுட் ஆப் கன்ட்ரோல்'தான். இங்கே இருக்கக் கூடியவர்கள் சிலரை மிரட்டி, கூட்டணி வைத்து கொண்டால், நீங்கள் ஜெயிக்க முடியுமா?

உங்கள் பரிவாரங்கள் எல்லாரையும் சேர்த்து கொண்டு வாருங்கள். ஒரு கை பார்ப்போம். நீங்கள் தன்மானமும், தமிழினமானமும் இல்லாத கொத்தடிமைகளின் துரோக கூட்டணியில் சேர்ந்து, தமிழகத்தை ஆள நினைக்கிறீர்கள். தேர்தலுக்குள், அடுத்த ஓராண்டில், நீங்கள் எப்படியெல்லாம் ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டுவீர்கள் என்று, எங்களுக்கு தெரியும்; ஏன் நாட்டு மக்களுக்கே நன்றாக தெரியும்.

நாங்கள் இந்த உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் அடிபணிகிற அடிமைகள் அல்ல. அமித் ஷா அல்ல, எந்த ஷாவாக இருந்தாலும், சொல்கிறேன். இங்கே ஆள முடியாது; இது தமிழகம். நான் இருக்கும் வரை உங்கள் திட்டம் பலிக்காது.

இவ்வாறு முதல்வர் பேசினார்.






      Dinamalar
      Follow us