ADDED : ஜன 29, 2026 03:06 AM

'காங்கிரஸ் கட்சிக்கு 'பூஸ்ட்' கொடுக்கிறோம்; 'பலம்' தருகிறோம்; எங்களுடன் வாருங்கள்' என யார் யாரோ பேசத் துவங்கி உள்ளனர். எங்கள் வரலாறை தக்கவைக்க உதவுவதாகவும் கூறி, கூட்டணிக்கு அழைக்கின்றனர். அப்படி பேசுவதால், அதற்கு மயங்கும் இயக்கம் காங்கிரஸ் அல்ல. காங்கிரஸ் இயக்கத்துக்கு யாரும் 'பூஸ்ட்' கொடுக்க வேண்டியதில்லை.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் இளம் தலைவர் ராகுல், எங்களுக்கு ஏற்கனவே 'பூஸ்ட்' மற்றும் 'ஹார்லிக்ஸ்' ஊட்டி இருக்கிறார். அதை சாப்பிட்டு விட்டு, நாங்கள் எப்போதும் தெம்பாகவே இருக்கிறோம். காங்கிரஸ் தேய்மானம் அடைந்துவிட்டது என்று சிலர் கூறுவதை கண்டிப்பதை தவிர, வேறு வழியில்லை. காங்கிரஸ் கட்சி எப்போதும் அதற்கான தனித்துவத்தை இழக்காமல் செயல்பட்டு வருகிறது.
- -செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழக காங்.,
