ADDED : ஜன 28, 2026 08:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: கூட்டணிக்கு வருமாறு, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உட்பட யாருமே என்னை இதுவரை கூப்பிடவில்லை. என் ஒற்றை வேண்டுகோள் என்னவென்றால், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான்.
அதுதான் என் தலையாய கோரிக்கை. ஆனால், அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா என்பது ஆண்டவனுக்கு தான் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

