ADDED : ஏப் 02, 2025 09:50 PM
எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள், வென்றார்கள், தோற்றார்கள். ஆனால், நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் தி.மு.க., தலைவர் கருணாநிதி மட்டுமே.
இந்திய வரலாற்றில், தன் ஆயுட்காலம் முழுதும், எம்.எல்.ஏ. வாக இருந்தவர் அவர் ஒருவரே. இது போன்று, அ.தி.மு.க., பழனிசாமிக்கு வரலாறு கிடையாது.
கவர்னர் தமிழிசை, மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன் உட்பட, பா.ஜ., வால் அடையாளப்படுத்தப்பட்ட தலைவர்கள் பலர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டும் தி.மு.க., கூட்டணியே 40 தொகுதிகளிலும் வென்றது.
ஈரோடு கிழக்கு தொகுதியில், ஈ.வெ.ரா., மண்ணில் நின்று, அவர் கொள்கைகளை தோற்கடிப்பேன் என்று கூறிய சீமான் உட்பட, 42 பேரும் டிபாசிட் இழந்தனர். இதுதான் மற்றவர்களுக்கான வரலாறு. தி.மு.க.,வுக்கு முன் யாரும் நிற்கக்கூட முடியாது.
கோவி செழியன், தமிழக அமைச்சர்

