ADDED : டிச 04, 2025 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை விட, செங்கோட்டையன் எல்லா விதத்திலும் அனுபவம் வாய்ந்தவர். துரோகமும், பொய்யையும் தவிர வேறு எதுவும் தெரியாதவர் பழனிசாமி.
அவருக்கு பாடம் புகட்ட, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தயாராகி விட்டார். ஜெயலலிதா படத்தை, சட்டைப்பையில் செங்கோட்டையன் வைத்திருப்பது, அவரது உண்மையான மனநிலையை காட்டுகிறது.
என்னிடம் நட்பு ரீதியாக, பா.ஜ.,வில் இருந்து பேசுகின்றனரே தவிர, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவதற்கு என்னிடம் யாரும் பேசவில்லை. அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பல்வேறு வாக்குறுதிகளை தந்த தி.மு.க.,வினர் இதுவரை நிறைவேற்றவில்லை. மாற்றுத்திறனாளிகள் கூட போராடும் சூழல் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வரும் தேர்தலில், தி.மு.க., அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.
-- தினகரன்
பொதுச்செயலர், அ.ம.மு.க.,

