யாரும் வெளியேற மாட்டாங்க... சொல்கிறார் கார்த்தி எம்.பி.,
யாரும் வெளியேற மாட்டாங்க... சொல்கிறார் கார்த்தி எம்.பி.,
ADDED : அக் 01, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : தி.மு.க., கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியேறாது என சிவகங்கை காங்., எம்.பி., கார்த்தி கூறினார்.
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர் மானாமதுரையில் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியேறாது. திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியலிலிருந்து கடவுளை, மத நம்பிக்கையை தள்ளி வைக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது நல்ல அறிவுரை. மதம், கடவுள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை அரசியலில் சேர்க்கக்கூடாது.
காவிரி நதிநீர் பிரச்னை குறித்து 2 மாநிலங்களும் பேசி தீர்க்கலாம். காங்., தலைவர் கார்கே மற்றும் ராகுலுக்கு ஆர்.எஸ். எஸ்.,நோட்டீஸ் அனுப்பியது வாடிக்கை தான். ஒரே நாடு, ஒரே தேர்தல் நிறைவேறாது. இந்த சட்டம் வராது. இவ்வாறு கூறினார்.

