யாருடைய மாநாடும் தாக்கத்தை ஏற்படுத்தாது: அமைச்சர் ரகுபதி
யாருடைய மாநாடும் தாக்கத்தை ஏற்படுத்தாது: அமைச்சர் ரகுபதி
ADDED : ஆக 18, 2025 03:24 AM
புதுக்கோட்டை : ''யாருடைய மதுரை மாநாடும் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது,'' என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
அவர் புதுக்கோட்டையில் நேற்று அளித்த பேட்டி:
பழிவாங்கும் எண்ணத்தோடு தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. அமைச்சர் பெரியசாமியின் அறை சாவியை, வாங்கித் திறந்து, சோதனை நடத்தி இருக்கலாம்; பூட்டை ஏன் உடைக்க வேண்டும்? சென்னையில், எம்.எல்.ஏ., விடுதிக்குள், சட்டப்பேரவை செயலரின் அனுமதி வாங்காமல் நுழைந்துள்ளனர்.
நடிகர் விஜய் மட்டுமல்ல, யாருடைய மதுரை மாநாடும், எவ்வித பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தாது. திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளே, எங்களுக்கு வெற்றியை தேடி தரும். பொன்னியின்செல்வன் போல, எங்கள் வெற்றி தொடரும்.
தமிழகத்திற்கு எத்தனை முறை, உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தாலும், தி.மு.க., கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது. தமிழகத்தில், பா.ஜ., வளர முடியாது. தமிழகத்தில், தொடர்ந்து, தி.மு.க., ஆட்சி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.