தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'தவறான தரவுகளால் பல்கலை மாணவர்களுக்கு உதவித்தொகை இல்லை'

 'தவறான தரவுகளால் பல்கலை மாணவர்களுக்கு உதவித்தொகை இல்லை'

 'தவறான தரவுகளால் பல்கலை மாணவர்களுக்கு உதவித்தொகை இல்லை'


ADDED : செப் 09, 2026 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'அண்ணா பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டாளரின் தவறான தரவுகளால், தகுதியான மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை' என, மத்திய கணக்குத் தணிக்கைத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட, 2025ம் ஆண்டுக்கான, சமூக நீதித்துறை தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019 - 22ம் ஆண்டுகளில், சராசரியாக 46 சதவீத பள்ளிகள், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கான 'பிரி மெட்ரிக்' உதவித்தொகை திட்டங்களை பயன்படுத்தவில்லை. அண்ணா பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டாளரின் தவறான தரவுகளால், தகுதியான மாணவர்களுக்கு வழங்க வேண்டிய, 1.12 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்படவில்லை. 2022 - 23ம் ஆண்டு தரவுகளின் மீதான ஆய்வில், 99 கல்வி நிறுவனங்களுக்கு இரட்டைக் கட்டணமாக, 99.99 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.

இதில், 95 கல்வி நிறுவனங்கள், இருமுறை வந்த கட்டணத்தை திரும்ப செலுத்தியுள்ளன. மீதமுள்ள நான்கு நிறுவனங்கள் செலுத்தவில்லை.

கடந்த 2021 - 23ம் ஆண்டுக்கான 'போஸ்ட் மெட்ரிக்' உதவித்தொகை தரவுகளை ஆய்வு செய்ததில், 196 சுயநிதி கல்வி நிறுவனங்கள், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ், 485 மாணவர்களுக்கு அனுமதி வழங்கி, ஒவ்வொரு மாணவருக்கும் கல்விக் கட்டணமாக, 55,000 ரூபாய்க்கும் அதிகமாக பெற்றது கண்டறியப்பட்டது.

இதனால், 1.65 கோடி ரூபாய் தவறான கல்வி கட்டணமாக வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us