தி.மு.க.,வுக்கு ஆதரவு இல்லை; கிராம கோவில் பூஜாரிகள் முடிவு
தி.மு.க.,வுக்கு ஆதரவு இல்லை; கிராம கோவில் பூஜாரிகள் முடிவு
ADDED : பிப் 18, 2024 07:02 AM

திருப்பூர் : ''லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவில்லை,'' என பல்லடம் கிராம கோவில் பூஜாரிகள் நலச்சங்கம் முடிவு செய்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிராம கோவில் பூஜாரிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. நடராஜன், தங்கவேல் முன்னிலை வகித்தனர். பல்லடம் பகுதி கிராம கோவில் பூஜாரிகள் பங்கேற்றனர்.
இதில், கோவில்களில் பூஜை செய்து வரும் பூஜாரிகளுக்கு வழங்கப்பட்ட இனாம் நிலங்களை பறிமுதல் செய்யும் அறநிலையத் துறையின் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. மன்னராட்சி காலம் முதல், கிராம கோவில்களில் பூஜை செய்து வருவோருக்கு 1863ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு இனாம் நிலம் வழங்கியது. அதில் விவசாயம் செய்து அந்த வருமானத்தை கொண்டு பிழைத்து வருகிறோம்.
இந்த நிலங்களை குறி வைத்து அறநிலையத் துறை அவற்றை பறிமுதல் செய்து வருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி, எங்களை வெளியேற்ற முயற்சிக்கின்றனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதற்கு துணையாக உள்ள தி.மு.க., அரசுக்கு, வரும் தேர்தலில் ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.