sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாடோடிகளான கிடைமாடு தொழிலாளர்கள்; இன மாடுகள் பாதுகாப்பில் முக்கிய பங்கு : சாணத்தை வாங்கும் கேரள விவசாயிகள்

/

நாடோடிகளான கிடைமாடு தொழிலாளர்கள்; இன மாடுகள் பாதுகாப்பில் முக்கிய பங்கு : சாணத்தை வாங்கும் கேரள விவசாயிகள்

நாடோடிகளான கிடைமாடு தொழிலாளர்கள்; இன மாடுகள் பாதுகாப்பில் முக்கிய பங்கு : சாணத்தை வாங்கும் கேரள விவசாயிகள்

நாடோடிகளான கிடைமாடு தொழிலாளர்கள்; இன மாடுகள் பாதுகாப்பில் முக்கிய பங்கு : சாணத்தை வாங்கும் கேரள விவசாயிகள்


ADDED : நவ 01, 2024 04:02 AM

Google News

ADDED : நவ 01, 2024 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி : பண்டிகை கொண்டாட்டங்களை மறந்து நாடோடிகளாய் திரியும் கிடைமாடு தொழிலாளர்கள் நாட்டின மாடுகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சாணங்களை கேரள விவசாயிகள் விரும்பி வாங்குவது இவர்களின் வாழ்வாதாரத்துக்கு கை கொடுக்கிறது .

வேளாண் பணிகளில் துவங்கி பால் கொடுக்கும் பசு, வீரம் பேசும் காளை மட்டுமின்றி கால்நடைகளின் பங்கெடுப்பு மனித வாழ்வில் அதிகம். இதில் அனைத்து இனங்களிலும் நாட்டு மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அறிவியல் வளர்ச்சி எதிரொலியாக இவற்றின் அரிய இனங்களில் பெரும்பாலானவை அழிந்து வருகின்றன. நாட்டு மாடுகள் வலுவான தேகத்துடன் பருவநிலை மாற்றத்தையும் குறைந்த அளவு மேய்ச்சலை உணவாகவும் கொண்டு தாக்குப்பிடித்து வாழக்கூடிய தகவமைப்பு கொண்டிருக்கும். தற்போது வரை இயற்கை உரத்தை விரும்பும் விவசாயிகளின் நண்பனான நாட்டு மாடுகளை பராமரிக்கும் தொழிலையே பலர் வாழ்வாதாரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்த பலர் மாடு மேய்ச்சலை குல தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள 15 க்கு மேற்பட்டோர் சராசரியாக மலை மாடுகள் உட்பட 750 முதல் 1000 மாடுகளை பராமரித்து கிடை மாடுகளாக பயன்படுத்துகின்றனர்.

ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வீட்டிலிருந்து தனித்தனியே புறப்படும் இக்குழுவினர் தரிசு நிலம் ,தோட்டங்களில் மாடுகளை தங்க வைக்கின்றனர். இதற்காக நாள் ஒன்றுக்கு ஒரு மாட்டிற்கு தலா 5 ரூபாய் வீதம் கட்டணமாக நிர்ணயிக்கின்றனர். மாட்டுச் சாணம் இயற்கை உரம் என்பதால் விவசாயிகள் அதிக நாட்கள் மாடுகளை தங்களின் தோட்டங்களில் தங்க வைப்பதை விரும்புகின்றனர். நாடோடிகளாக திரிந்து காடு, மலை என மேய்ச்சல் நிலங்களை தேடி அலையும் இக்குழுவினர் விவசாயிகளின் உற்ற நண்பனாக உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியில் 1200 மாடுகளை மேய்ச்சலில் விட்டிருந்த கிடை மாடு தொழிலாளர் எஸ். ரஞ்சித் கூறியதாவது:

எங்கள் பகுதியை சேர்ந்த பலர் கிடை மாடு பராமரிப்பையே குலத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் வாழ்க்கையே நாடோடி வாழ்க்கை தான். அழிந்து வரும் அரிய வகை நாட்டு இன மாடுகளான முள்ளிபாளையம், வெள்ளைக்கொம்பன், கட்டக்கொம்பன், கருத்த கொம்பன், நெட்ட காலன், நெய்க்காலன், கரிசல்பசு உட்பட 18 வகை மாடுகளை மேய்ச்சலில் பராமரித்து வருகிறோம். 20 ஆண்டுகளுக்கு முன் வனத்துறையினர் மலைப்பகுதியில் மாடுகளை மேய்க்க அனுமதி கொடுத்திருந்தனர் .அப்போது 6 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தற்போது வனத்துறையினர் மலைப்பகுதிகளில் மாடுகளை மேய்க்க அனுமதி வழங்குவது இல்லை. இதனால் இவற்றை பராமரிப்பதில் சிக்கல் உள்ளது. இதையடுத்து நாங்கள் நாடோடிகளாக மாறி விட்டோம். கிராமம் கிராமமாக சென்று வயல்வெளிகளில் மாடுகளை மேய்ப்பது , கிடை அமைத்தலை தொழிலாக மேற்கொண்டு வருகிறோம். செயற்கை கலப்பில்லாத நிலத்தின் பாதிப்பை தவிர்க்கும் சிந்தனை கொண்ட விவசாயிகளுக்கு மாட்டுச் சாணமும் முக்கிய தேடலாக அமைந்துள்ளது. மாட்டு சாணம் இயற்கை உரம் என்பதால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பட்டி அமைக்க விரும்புகின்றனர். ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டுமே வீடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைப்பதில்லை. குடும்பத்தினரின் மகிழ்ச்சியே மன நிறைவு தரும். ஐப்பசி மாதத்தில் வீட்டை விட்டு புறப்படும் சூழலில் 4 மாதங்களுக்கு பின் தைப்பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றடைவோம். அறுவடை காலம் முடிந்த பின் மீண்டும் நாடோடிகளாக இயற்கை உரங்களை விரும்பும் விவசாயிகளை தேடி புறப்பட்டு விடுவோம்.

சில விவசாயிகள் மின் பம்ப் மூலம் மாடுகளுக்கு இலவசமாக அருந்துவதற்கு தண்ணீர் வழங்குவர். மின் பம்ப், கிணறு வசதி இல்லாத பகுதிகளில் சம்பந்தப்பட்ட கிராமத்தை சுற்றிய இடங்களில் இருந்து டிராக்டர் மூலம் தண்ணீர் வினியோகிப்பாளர் தேடி இவற்றிற்கான நீர் ஆதாரத்திற்கு ஏற்பாடு செய்து கொள்வோம். இதற்காக தினமும் குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபாய் வரை செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

தமிழகத்தை விட கேரள விவசாயிகள் தான் இது போன்ற பல வகை ஜாதி மாடுகளின் சாணங்களை பெறுவதற்கு போட்டி போட்டு வருகின்றனர் . 65 கிலோ கொண்ட சாக்கு பை சாணத்தை தலா 200 ரூபாய் கொடுத்து வாங்கி செல்கின்றனர் என்றார்.






      Dinamalar
      Follow us