தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இழப்பீடு தராத விவகாரம்: வீட்டு வசதி வாரிய அலுவலகம் ஜப்தி

இழப்பீடு தராத விவகாரம்: வீட்டு வசதி வாரிய அலுவலகம் ஜப்தி

இழப்பீடு தராத விவகாரம்: வீட்டு வசதி வாரிய அலுவலகம் ஜப்தி


UPDATED : பிப் 26, 2025 05:46 PM

ADDED : பிப் 26, 2025 05:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 26, 2025 05:46 PM ADDED : பிப் 26, 2025 05:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு தராததால், ராமநாதபுரத்தில் வீட்டு வசதி வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

ராமநாதபுரம் பட்டினம் காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் அகமது ஜலால். இவரது ஒரு ஏக்கர் 15 சென்ட் நிலத்தை 1997 ஏப்ரல் 3ம் தேதி ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கையகப்படுத்தப்பட்டு வீட்டு வசதி வாரிய அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடாக சென்ட் 5000 ரூபாய் வீதம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வீட்டு வசதி வாரிய அலுவலர்கள் 2007 அக்டோபர் 31ல் முதல் தவணையாக 8 லட்சத்து 23 ஆயிரத்து 844 ரூபாய் வழங்கினர். இரண்டாவது தவணையாக 2009இல் மே 18 இல் 5 லட்சத்து 87 ஆயிரத்து 144 ரூபாய் வழங்கப்பட்டது.

மீதமுள்ள ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 798 ரூபாய்க்கு பணம் வழங்காததால் அகமது ஜலால், ராமநாதபுரம் சப் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சப் கோர்ட் நீதிபதி அகிலா தேவி ராமநாதபுரம் வீட்டுவசதி வாரிய அலுவலக பொறியாளர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். ராமநாதபுரம் நீதிமன்ற முதுநிலை ஆமினா ஆனந்தராஜ் தலைமையிலான ஊழியர்கள் ராமநாதபுரம் வீட்டு வசதி நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருள்களை ஜப்தி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us