ADDED : மார் 29, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ''கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், சுருக்கமில்லா சட்டைகள், விரைவில் அறிமுகப்படுத்தப்படும்,'' என, அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில், அதிகரிக்க, விற்பனையாளர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், 50 லட்சம் ரூபாயில் செயல்படுத்தப்படும்
சுருக்கமில்லா 5,000 சட்டைகள், 35 லட்சம் ரூபாய் செலவில் அறிமுகப்படுத்தப்படும்
மின் வணிக வலைதளம், 20 லட்ச ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்படும்
ராணிப்பேட்டையில், 'கோ - ஆப்டெக்ஸ்' நிறுவனத்தின், ஒருங்கிணைந்த கைத்தறி விற்பனை வளாகம், 1.50 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.