தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கரூரில் சகஜ நிலை திரும்புகிறது

கரூரில் சகஜ நிலை திரும்புகிறது

கரூரில் சகஜ நிலை திரும்புகிறது


ADDED : அக் 02, 2025 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2025 07:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் - ஈரோடு சாலை வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதனால், முதல்வர் ஸ்டாலின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் முருகன், அகில இந்திய காங்., பொதுச்செயலாளர் வேணுகோபால், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., உள்ளிட்ட, பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தும், காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறியும் சென்றனர்.

காயமடைந்தவர்களில் தற்போது, ஆறு பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கரூர் மற்றும் வேலுச்சாமிபுரத்தில் நேற்று சகஜ நிலை மெல்ல திரும்பியது. பொதுமக்கள் நேற்று ஆயுத பூஜையையொட்டி கடைகளில் பொருட்களை வாங்கி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us